இலங்கையில் பொல்கஹவெல மற்றும் பேராதனை இடையே தினசரி விசேட ரயில் சேவையொன்றை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 12ஆம் திகதி திங்கட்கிழமை முதல் இந்த ரயில் சேவையை முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
குறிப்பாக, பாடசாலை மாணவர்கள் மற்றும் அன்றாடம் ரயிலில் பயணிக்கும் பொதுமக்களின் போக்குவரத்துத் தேவைகளைக் கருத்திற்கொண்டு இந்த ஏற்பாடு மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மலையக ரயில் பாதையில் ஏற்பட்ட பாதிப்புகளுக்குப் பின்னர் ரயில் சேவைகளை வழமைக்குக் கொண்டுவரும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இந்தப் புதிய சேவை பயணிகளுக்கு உதவியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொல்கஹவெல மற்றும் பேராதனை இடையேயான ரயில் சேவை நேர அட்டவணையை ரயில்வே திணைக்களம் வெளியிட்டுள்ளது.











