EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
வடக்கில் சுற்றாடல் சட்டத் திருத்தங்கள் மற்றும் கழிவு முகாமைத்துவம் தொடர்பான அறிவூட்டல் நிகழ்வு!

வடக்கில் சுற்றாடல் சட்டத் திருத்தங்கள் மற்றும் கழிவு முகாமைத்துவம் தொடர்பான அறிவூட்டல் நிகழ்வு!

ஐப்பசி 18, 2026
வகை: இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

வடக்கு மாகாணத்தில் சுற்றாடல் பாதுகாப்பை வலுப்படுத்தவும், பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் மாசுபாட்டைக் கட்டுப்படுத்தவும் உள்ளூராட்சி மன்றங்களின் பங்களிப்பை அதிகரிக்கும் நோக்கில், சுற்றாடல் சட்டத் திருத்தங்கள் மற்றும் கழிவு முகாமைத்துவம் தொடர்பான அறிவூட்டல் நிகழ்வு கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண பிரதம செயலாளர் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

சுற்றாடல் அமைச்சும் வடக்கு மாகாண உள்ளூராட்சித் திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்வு, உள்ளூராட்சி ஆணையாளரின் தலைமையில் நடைபெற்றது.

இதில் சுற்றாடல் பிரதி அமைச்சர் அநுர ஜெயக்கொடி, மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் வளவாளர்கள், வடக்கு மாகாணத்திலுள்ள மாநகர சபைகளின் முதல்வர்கள், பிரதி முதல்வர்கள், நகர சபைகள் மற்றும் பிரதேச சபைகளின் தவிசாளர்கள், உப தவிசாளர்கள், செயலாளர்கள் மற்றும் சுற்றாடல் தொடர்பான பணிகளைக் கையாளும் உத்தியோகத்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.

2026ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சுற்றாடல் சட்டத் திருத்தங்கள், அவற்றின் முக்கிய ஏற்பாடுகள் மற்றும் சுற்றாடல் பாதுகாப்பில் உள்ளூராட்சி மன்றங்கள் ஆற்ற வேண்டிய பங்கு தொடர்பில் இதன்போது விளக்கமளிக்கப்பட்டது.

குறிப்பாக, ‘விரிவாக்கப்பட்ட உற்பத்தியாளரின் பொறுப்பு’ என்ற அடிப்படையில், சுற்றாடல் மாசுபாட்டுக்குக் காரணமாகும் பொருட்களை உற்பத்தி செய்பவர்கள், அவற்றின் பயன்பாட்டுக்குப் பின்னரான கழிவுகளை மீள்சுழற்சி செய்வதிலும் சுற்றாடலுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் கையாள்வதிலும் கொண்டிருக்க வேண்டிய பொறுப்புகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

மேலும், நுண் பிளாஸ்டிக் துகள்களால் ஏற்படும் சுற்றாடல் பாதிப்புகள், பிளாஸ்டிக் கழிவுகளைக் கட்டுப்படுத்துவதில் எதிர்கொள்ளப்படும் சவால்கள், கழிவு முகாமைத்துவத்தைச் சிறப்பாக முன்னெடுப்பதற்கான வழிமுறைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாகச் சுற்றாடல் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

சுற்றாடல் சட்டத் திருத்தங்கள் குறித்த அறிவைப் பெற்றுக்கொள்வதுடன், அவற்றை நடைமுறையில் சிறப்பாகச் செயற்படுத்துவதற்கான விழிப்புணர்வையும் உள்ளூராட்சி மன்றங்களிடையே ஏற்படுத்துவது இந்நிகழ்வின் முக்கிய நோக்கமாக அமைந்திருந்தது.

தொடர்புடைய செய்திகள்

வசாவிளான் மக்களின் காணி மீட்புப் போராட்டம் ஆறாவது வாரமாகத் தொடர்கிறது!
அண்மைய செய்திகள்

வசாவிளான் மக்களின் காணி மீட்புப் போராட்டம் ஆறாவது வாரமாகத் தொடர்கிறது!

ஐப்பசி 18, 2026
யாழில் வெள்ளப் பாதிப்புகளைக் குறைக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பு – அமைச்சர் சந்திரசேகர்
அண்மைய செய்திகள்

யாழில் வெள்ளப் பாதிப்புகளைக் குறைக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பு – அமைச்சர் சந்திரசேகர்

ஐப்பசி 18, 2026
ஐந்து நாய்களை வளர்த்த  உரிமையாளருக்கு எதிராக வழக்கு தாக்கல்
அண்மைய செய்திகள்

ஐந்து நாய்களை வளர்த்த உரிமையாளருக்கு எதிராக வழக்கு தாக்கல்

ஐப்பசி 18, 2026
காங்கேசன்துறையில் பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் தூய்மையாக்கல் செயற்றிட்டம் முன்னெடுப்பு
அண்மைய செய்திகள்

காங்கேசன்துறையில் பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் தூய்மையாக்கல் செயற்றிட்டம் முன்னெடுப்பு

ஐப்பசி 18, 2026
சிகிச்சைக்காக நவலோக வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட ஷிரந்தி ராஜபக்ஷ
அண்மைய செய்திகள்

சிகிச்சைக்காக நவலோக வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட ஷிரந்தி ராஜபக்ஷ

ஐப்பசி 18, 2026
சில மாவட்டங்களுக்கு மின்னல் எச்சரிக்கை விடுப்பு
அண்மைய செய்திகள்

சில மாவட்டங்களுக்கு மின்னல் எச்சரிக்கை விடுப்பு

ஐப்பசி 18, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

சிறப்புச் செய்திகள்

யோஷித ராஜபக்சவின் வழக்கு ஒத்திவைப்பு

யோஷித ராஜபக்சவின் வழக்கு ஒத்திவைப்பு

5 நாட்கள் முன்னர்

மாற்றுத்திறனாளிகளுக்கான மாகாண மட்ட மெய்வல்லுநர் போட்டி

5 நாட்கள் முன்னர்
யாழில் வெள்ளப் பாதிப்புகளைக் குறைக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பு – அமைச்சர் சந்திரசேகர்

யாழில் வெள்ளப் பாதிப்புகளைக் குறைக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பு – அமைச்சர் சந்திரசேகர்

7 மணத்தியாலங்கள் முன்னர்
யாழில் பாதுகாப்புப் படையினரின் வசமிருந்த 11.23 ஏக்கர் காணிகள் விடுவிப்பு!

யாழில் பாதுகாப்புப் படையினரின் வசமிருந்த 11.23 ஏக்கர் காணிகள் விடுவிப்பு!

2 நாட்கள் முன்னர்
யாழில் 190 மில்லியன் ரூபா செலவில் நிலத்தடி நீர் முகாமைத்துவப் பிரிவு!

யாழில் 190 மில்லியன் ரூபா செலவில் நிலத்தடி நீர் முகாமைத்துவப் பிரிவு!

2 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check