நடிகர் ஜீவா நடிப்பில் உருவாகியுள்ள ‘தகப்பன்’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘தங்கப்புள்ள’ பாடல் வெளியாகியுள்ளது.
கிடா படத்தை இயக்கிய ரா. வெங்கட் இப்படத்தை இயக்குகிறார்.
கருடன், மாமன் போன்ற படங்களைத் தயாரித்த லார்க் ஸ்டூடியோஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது.
மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைப் பின்னணியாகக் கொண்டு, அப்பா – மகன் இடையேயான ஆழமான பாசம் மற்றும் உறவை மையமாகக் கொண்ட குடும்பக் கதையாக இப்படம் உருவாகியுள்ளது.
இப்படத்தில் ஜீவாவோடு இணைந்து ரஜிஷா விஜயன், லட்சுமி ராமகிருஷ்ணன் மற்றும் குழந்தை நட்சத்திரம் கேசவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
படத்தின் ஒட்டுமொத்தப் படப்பிடிப்பும் 40 நாட்களில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
இத்திரைப்படம் வரும் டிசம்பர் 24 ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் எனப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.











