மலையாளத்தில் ‘ரோமாஞ்சம்’ மற்றும் ‘ஆவேஷம்’ ஆகிய படங்களை இயக்கிய ஜித்து மாதவன் இயக்கத்தில், நடிகர் சூர்யா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘சீன்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரைலர் வெளியாகியுள்ளது.
இப்படத்தில் நடிகர் சூர்யா முற்றிலும் மாறுபட்ட கலகலப்பான பொலிஸ் அதிகாரியாக நடித்துள்ளார் என்பது டிரைலர் மூலம் தெரியவந்துள்ளது.
இத்திரைப்படத்தின் மூலம் பிரபல மலையாள நடிகை நஸ்ரியா நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழ் சினிமாவுக்குத் திரும்புகிறார்.
இவருடன் இணைந்து வளர்ந்து வரும் இளம் நடிகர் நஸ்லென் மற்றும் லால், ஆனந்தராஜ், ராஜ்பிரியன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ழகரம் ஸ்டூடியோஸ் மற்றும் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இத்திரைப்படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ளார்.
திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்திரைப்படம், தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு வரும் நவம்பர் 6-ஆம் திகதி உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
தற்போது வெளியாகியுள்ள டிரைலர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதுடன், படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.











