பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவின் பிணை மனு மீதான தீர்ப்பை எதிர்வரும் நவம்பர் 3 ஆம் திகதி அறிவிக்கவுள்ளதாக கொழும்பு நீதவான் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதன்படி கொழும்பிலுள்ள டிரான்ஸ் வொர்க்ஸ் சதுக்கத்தில் அமைந்துள்ள காணியை க்ரிஷ் குழுமத்திற்கு மாற்ற உதவியமைக்கு இலஞ்சம் பெற்ற காரணத்தினால் நாமல் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மேலும் சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை ஆராய்ந்த பின்னரே கொழும்பு பிரதான நீதவான் தீர்ப்பை நவம்பர் 3 ஆம் திகதிக்கு தள்ளி வைத்துள்ளார்.











