கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணனுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் அவதூறு பதிவிட்டதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு, எதிர்வரும் டிசம்பர் 14ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் இரா. அருச்சுனா, முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம். ஹரீஸ் உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக, நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தின் கீழ் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இன்று நடைபெற்ற விசாரணையில் அருச்சுனா, ஹரீஸ் உள்ளிட்ட நால்வர் நீதிமன்றத்தில் முன்னிலையாகினர். இதனையடுத்து, வழக்கின் இறுதித் தீர்ப்புக்காக டிசம்பர் 14ஆம் திகதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.











