நக்கிள்ஸ் வனப்பகுதியில் உள்ள குகையொன்றில் குழந்தையுடன் கண்டுபிடிக்கப்பட்ட 15 வயது சிறுமியின் கல்வி மற்றும் எதிர்கால நலனுக்காக அரசாங்கம் விசேட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.
குறித்த சிறுமி சாதாரண தரப் பரீட்சைக்குத் தயாராவதற்கு உளவியல் ஆலோசனைகளும், அரசாங்கத்தின் ‘அர்த்தா’ திட்டத்தின் கீழ் மாதாந்த வாழ்வாதாரக் கொடுப்பனவும் வழங்கப்படவுள்ளன.
அத்துடன், சிறுமியின் குழந்தையின் போஷாக்கு மற்றும் கல்வித் தேவைகளுக்கும் நிதியுதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த உதவிகள் சிறுமி உயர்கல்வி அல்லது தொழிற்பயிற்சியைத் தொடரும் வரையில் வழங்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.











