தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஏற்பாடு செய்திருந்த மாவீரர் பெற்றோர் உரித்துடையோர் மதிப்பளிப்பு நிகழ்வு இன்று(18) முல்லைத்தீவில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது
முன்னதாக மாவீரர்களின் பெற்றோர் உரித்துடையவர்கள் முல்லைத்தீவு நகர்ப் பகுதியிலிருந்து முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச சபையினுடைய கலாச்சார மண்டபம் வரை பான்ட் வாத்திய அணிவகுப்புடன் அழைத்துச் செல்லப்பட்டு அங்கு நிகழ்வுகள் இடம்பெற்றது.
மாவீரர்களின் திருவுருவப்படங்களுக்கு சுடர் ஏற்றப்பட்டு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டதை தொடர்ந்து அரங்க நிகழ்வுகள் இடம் பெற்றன.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அரசியல் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்துகொண்டு முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த மாவீரர்களின் பெற்றோர் உரித்துடையவர்களை கௌரவிக்கின்ற நிகழ்வு இடம்பெற்றது.
கலை நிகழ்வுகளை தொடர்ந்து பெற்றோர்களுக்கான மதிய உணவும் அவர்களுக்கான நினைவு பரிசல்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.











