கனடாவின் தொழில்முறை மகளிர் ஹொக்கி லீக் எனப்படும் PWHL, புதிய பருவத்தில் எட்டு அணிகளிலிருந்து 12 அணிகளாக விரிவடைந்துள்ளது.
இதன் மூலம் டெட்ராய்ட், ஹாமில்டன், லாஸ் வேகாஸ் மற்றும் சான் ஜோஸ் ஆகிய நான்கு புதிய அணிகள் லீக்கில் இணைந்துள்ளன.
இந்த விரிவாக்கம் வீரர்களிடையே புதிய போட்டிகளையும், அணிகளுக்கான சவால்களையும் உருவாக்கும் என மொன்றியல் விக்டோயர் அணியின் வீரர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், மொன்றியல் விக்டோயர் அணியின் 2026 – 27 பருவத்திற்கான முதல் உள்ளூர் போட்டி எதிர்வரும் டிசம்பர் 5ஆம் திகதி லாவலில் உள்ள Place Bell அரங்கில் நடைபெறவுள்ளது.
இந்தப் போட்டியில் புதிய அணியான ஹாமில்டன் ஹாவோக் அணியை மொன்றியல் விக்டோயர் எதிர்கொள்ளவுள்ளது.
குறிப்பாக, இந்தப் பருவத்தில் அணியின் வீரர் பட்டியலில் புதிய வீரர்களும் இடம்பெறுவதால், ரசிகர்கள் புதிய முகங்களைக் காண முடியும்.
மேலும், நடப்புச் சம்பியனான மொன்றியல் விக்டோயர் தனது சம்பியன் பட்டத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்கான பயணத்தையும் இந்தப் போட்டியுடன் ஆரம்பிக்கவுள்ளது.
இந்தப் போட்டி கனடாவின் Hockey Night in Canada நிகழ்ச்சியிலும் ஒளிபரப்பப்படவுள்ளதால், மகளிர் ஹொக்கி வரலாற்றிலும் முக்கியத்துவம் பெறுகிறது.











