இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் தோனி, ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
2027ஆம் ஆண்டு ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆலோசகராக (Team Mentor) புதிய பொறுப்பை ஏற்கவுள்ளதாக அந்த அணி நிர்வாகம் இன்று (17) அறிவித்துள்ளது.
2008ஆம் ஆண்டு முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் பயணித்த தோனி, அந்த அணிக்கு ஐந்து முறை ஐ.பி.எல். சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து கடந்த 2020ஆம் ஆண்டு ஓய்வுபெற்றிருந்த அவர், தற்போது ஐ.பி.எல். வீரர் பயணத்திற்கும் விடை கொடுத்துள்ளார்.
தோனியின் ஓய்வு அறிவிப்பு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.











