EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
செம்மணி மனித புதைகுழிகள் தொடர்பிலான சாட்சிகளுக்கு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை

செம்மணி மனித புதைகுழிகள் தொடர்பிலான சாட்சிகளுக்கு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை

ஆவணி 4, 2025
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

செம்மணி மனித புதைகுழிகள் தொடர்பிலான சாட்சிகளுக்கு மனித உரிமை ஆணைக்குழு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கும் என ஆணைக்குழுவின் ஆணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

செம்மணி மனித புதைகுழிகளின் அகழ்வு பணிகளை மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர்களான கலாநிதி ஜகன் குணத்திலாக , பேராசிரியர் தை. தனராஜ் மற்றும் பேராசியர் பாத்திமா பர்ஷான ஹனீபா ஆகியோருடன் மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ் . பிராந்திய இணைப்பாளர் த, கனகராஜ் உள்ளிட்ட குழுவினர் நேரில் பார்வையிட்டனர்.

புதைகுழிகளை பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

செம்மணி புதைகுழி அகழ்வு பணிகளை நேரில் பார்வையிட்டோம். அகழ்வு பணிகள் தொடர்பிலும் கேட்டறிந்தோம் என்றனர்.

அதன் போது ஊடகவியலாளர் ஒருவர் செம்மணி புதைகுழிகள் தொடர்பில் சாட்சியம் சொல்ல தயார் என கிருஷாந்தி கொலை வழக்கில் குற்றவாளியாக சிறையில் இருக்கும் ராஜபக்சே என்பவர் கூறியுள்ளார். சிறையில் அவரது பாதுகாப்பு தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழு நடவடிக்கை எடுக்குமா ? என கேள்வி எழுப்பினர்.

அதற்கு , அவருக்கு சிறையில் அச்சுறுத்தல் இருப்பதாக எமக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றால் நிச்சயமாக அவரது பாதுகாப்பு தொடர்பில் நடவடிக்கை எடுப்போம் என்றனர்.

யாழ்ப்பாணத்தில் 96ஆம் ஆண்டு கால பகுதிகளில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் மேற்கொண்ட விசாரணைகள் தொடர்பிலான அறிக்கையை வெளியீடு செய்வீர்களா என கேட்ட போது,

யாழ்ப்பாணத்தில் 1996 – 1997 ஆம் ஆண்டு கால பகுதியில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டு 2003ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையை மனித உரிமை ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணைத்தளத்தில் பதிவேற்ற நடவடிக்கை எடுத்துள்ளோம் என்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அனுமதியின்றி யாழ் – கொழும்பு போக்குவரத்து சேவையில் ஈடுபட்ட பேருந்துகளுக்கு எதிராக நடவடிக்கை
அண்மைய செய்திகள்

அனுமதியின்றி யாழ் – கொழும்பு போக்குவரத்து சேவையில் ஈடுபட்ட பேருந்துகளுக்கு எதிராக நடவடிக்கை

புரட்டாதி 21, 2026
யாழில். பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்கும் மையம் திறப்பு
அண்மைய செய்திகள்

யாழில். பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்கும் மையம் திறப்பு

புரட்டாதி 21, 2026
யாழில் கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் புதிய பிரதிப் பணிப்பாளர் நியமிப்பு
இலங்கை

யாழில் கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் புதிய பிரதிப் பணிப்பாளர் நியமிப்பு

புரட்டாதி 21, 2026
வடமாகாண விளையாட்டு போட்டிகளில் யாழ். மாவட்டம் முதலிடம்
அண்மைய செய்திகள்

வடமாகாண விளையாட்டு போட்டிகளில் யாழ். மாவட்டம் முதலிடம்

புரட்டாதி 21, 2026
நல்லூரில் இடம்பெற்ற தியாக தீபம் திலீபனின் ஏழாம் நாள் நிகழ்வு
அண்மைய செய்திகள்

நல்லூரில் இடம்பெற்ற தியாக தீபம் திலீபனின் ஏழாம் நாள் நிகழ்வு

புரட்டாதி 21, 2026
சிவராசா அனோஜனை நிபந்தனை இன்றி விடுதலை செய்யுமாறு  சுரேஷ் பிரேமச்சந்திரன் வேண்டுகோள்
அண்மைய செய்திகள்

சிவராசா அனோஜனை நிபந்தனை இன்றி விடுதலை செய்யுமாறு சுரேஷ் பிரேமச்சந்திரன் வேண்டுகோள்

புரட்டாதி 21, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

சிறப்புச் செய்திகள்

தியாக தீபம் நினைவிட ஒலிபெருக்கி பறிமுதல் – பொலிஸ் பொறுப்பதிகாரியுடன் கஜேந்திரகுமார் பேச்சு

தியாக தீபம் நினைவிட ஒலிபெருக்கி பறிமுதல் – பொலிஸ் பொறுப்பதிகாரியுடன் கஜேந்திரகுமார் பேச்சு

2 நாட்கள் முன்னர்
மோடியின் உதவியை நாடுமாறு ஜனாதிபதியிடம் மனோ கணேசன் கோரிக்கை

மோடியின் உதவியை நாடுமாறு ஜனாதிபதியிடம் மனோ கணேசன் கோரிக்கை

2 நாட்கள் முன்னர்
கைதடியில் புதிய தபால் நிலையம் திறப்பு

கைதடியில் புதிய தபால் நிலையம் திறப்பு

2 நாட்கள் முன்னர்
யாழில் ஆரம்பமான அரச சேவை வலைப்பந்தாட்ட தேசிய மட்டப் போட்டிகள்

யாழில் ஆரம்பமான அரச சேவை வலைப்பந்தாட்ட தேசிய மட்டப் போட்டிகள்

6 நாட்கள் முன்னர்
வடக்கு சுகாதாரத்துறையின் நிதி மற்றும் நிர்வாக சவால்கள் குறித்து ஆராய்வு

வடக்கு சுகாதாரத்துறையின் நிதி மற்றும் நிர்வாக சவால்கள் குறித்து ஆராய்வு

3 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In