ஹட்டன் செனன் பகுதியின் வீதியோரத்தில் சிறுத்தையொன்று உயிரிழந்த நிலையில் நேற்று (29) மாலை மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சிறுத்தையானது வீதியை கடக்க முட்பட்ட வேளையில் வாகனம் மோதி உயிரிழந்திருக்கலாம் என பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்விடயம் அறிந்து அப்பகுதிக்கு வந்த பொலிஸார் சிறுத்தையின் உடலை நல்லத்தண்ணி வனவிலங்கு அலுவலகத்திடம் ஒப்படைத்துள்ளனர்.











