மொன்றியலில் (Montreal) உள்ள புகழ்பெற்ற ஜக் – கார்டியே (Jacques-Cartier) பாலத்தின் அடிவாரப் பகுதியில் இடம்பெற்ற பயங்கர கார் விபத்தில் 83 வயது முதியவர் ஒருவர் படுகாயமடைந்தமை தொடர்பில், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பாலத்திற்கு அருகில் பயணித்துக்கொண்டிருந்த கார், எதிர்பாராத விதமாக வீதியை விட்டு விலகி அருகிலிருந்த மரமொன்றில் பலமாக மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் காரைச் செலுத்திய 83 வயதான சாரதி பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
எனினும், அவரது உயிருக்கு ஆபத்து ஏதுமில்லை என மருத்துவமனை வட்டாரங்களை மேற்கோள்காட்டி கியூபெக் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
விபத்துக்கான ஆரம்பக்கட்டக் காரணங்கள் குறித்து கியூபெக் பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
விபத்து நேரிட்ட போது காரில் ஓட்டுநரைத் தவிர வேறு பயணிகள் யாரும் இருக்கவில்லை என்பதுடன், வேறு எந்தவொரு வாகனமும் இந்த விபத்துடன் தொடர்புபடவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.











