EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு கியூபெக்
கியூபெக்கில் மூடப்பட்டுள்ள  இரு முன்னணித் தனியார் கல்லூரிகள்

கியூபெக்கில் மூடப்பட்டுள்ள  இரு முன்னணித் தனியார் கல்லூரிகள்

ஆடி 14, 2026
வகை: கியூபெக்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

கியூபெக் மாகாணத்தில் உள்ள இரு முன்னணித் தனியார் கல்லூரிகள் எவ்வித முன்கூட்டிய அறிவிப்புமின்றி திடீரென மூடப்பட்டதை அடுத்து, அங்கு கல்வி கற்று வந்த நூற்றுக்கணக்கான சர்வதேச மாணவர்கள் பெரும் தவிப்புக்குள்ளாகியுள்ளனர்.

மொன்றியலில் அமைந்துள்ள ‘கொலேஜ் சுப்பீரியர் டி மொன்றியல்’ (Collège supérieur de Montréal) மற்றும் அதன் சகோதர வளாகமான ‘கொலேஜ் சுப்பீரியர் டி ஷெர்புரூக்’ (Collège supérieur de Sherbrooke) ஆகிய இரு கல்வி நிறுவனங்களுமே திடீரென மூடப்பட்டுள்ளன.

கியூபெக் மாகாண கல்வி அமைச்சு இக்கல்லூரிகளுக்கான செயல்பாட்டு அனுமதிப் பத்திரத்தை புதுப்பிக்க மறுத்தமையே, இவை மூடப்பட்டமைக்கான காரணமாகும்.

இறுதியாண்டுப் பரீட்சைகள் நடந்து கொண்டிருக்கும் வேளையிலும், பலர் தங்களது படிப்பை முடித்து தொழிற்பயிற்சிகளை (Internships) ஆரம்பிக்கவிருந்த நிலையிலும் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளதால் மாணவர்கள் தங்களின் எதிர்காலம் குறித்து திகைப்படைந்துள்ளனர்.

இதனையடுத்து தங்களுக்கு முறையான தீர்வு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி, பாதிக்கப்பட்ட மாணவர்கள் இன்று காலை மொன்றியலில் மூடப்பட்ட கல்லூரி வளாகத்திற்கு முன்பாகத் திரண்டு மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.

”கல்வி அமைச்சு அனுமதிப் பத்திரத்தை புதுப்பிக்க மறுத்ததால் கல்லூரி மூடப்படுகிறது என்பதைத் தவிர நிர்வாகத் தரப்பிலிருந்து வேறு எந்தத் தகவலும் முறையாகப் பகிரப்படவில்லை” என, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் கியூபெக் அரசாங்கம் உடனடியாகத் தலையிட்டு இக்கல்லூரிகளை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

முன்னாள் ஆடை வடிவமைப்பு நிபுணரான  பீட்டர் நைகார்ட் மீதான  விசாரணை ஆரம்பம்
கியூபெக்

முன்னாள் ஆடை வடிவமைப்பு நிபுணரான பீட்டர் நைகார்ட் மீதான விசாரணை ஆரம்பம்

ஆடி 14, 2026
 திறந்தவெளியில் தீ மூட்டுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கிய கியூபெக் மாகாண அரசு
கியூபெக்

 திறந்தவெளியில் தீ மூட்டுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கிய கியூபெக் மாகாண அரசு

ஆடி 14, 2026
கடும் நெருக்கடியைச் சந்தித்துள்ள மொன்றியலின்  முக்கிய மூன்று  பொது மருத்துவமனைகள்
கியூபெக்

கடும் நெருக்கடியைச் சந்தித்துள்ள மொன்றியலின் முக்கிய மூன்று பொது மருத்துவமனைகள்

ஆடி 14, 2026
கியூபெக் அரசின் நீர்மின் திட்ட ஒப்பந்தம்: பொது வாக்கெடுப்பில் பூர்வகுடிமக்கள் அaதிரடி நிராகரிப்பு!
அண்மைய செய்திகள்

கியூபெக் அரசின் நீர்மின் திட்ட ஒப்பந்தம்: பொது வாக்கெடுப்பில் பூர்வகுடிமக்கள் அaதிரடி நிராகரிப்பு!

ஆடி 14, 2026
‘கியூபெக் தேர்தலில் தாம் போட்டியிடப் போவதில்லை’ குடிவரவு அமைச்சர் பிரான்சுவா பொன்னார்டெல் அறிவிப்பு!
அண்மைய செய்திகள்

‘கியூபெக் தேர்தலில் தாம் போட்டியிடப் போவதில்லை’ குடிவரவு அமைச்சர் பிரான்சுவா பொன்னார்டெல் அறிவிப்பு!

ஆடி 14, 2026
பழைய துறைமுகத்தில் நபர் ஆற்றுக்குள் விழுந்து விபத்து: தீவிர தேடுதலுக்குப் பின் கடலோரக் காவல்படையினால் மீட்பு!
அண்மைய செய்திகள்

பழைய துறைமுகத்தில் நபர் ஆற்றுக்குள் விழுந்து விபத்து: தீவிர தேடுதலுக்குப் பின் கடலோரக் காவல்படையினால் மீட்பு!

ஆடி 14, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

சிறப்புச் செய்திகள்

கனடாவில் ஜூன் மாதத்தில் 18,000 புதிய வேலைவாய்ப்புகள்; 6.5% ஆகக் குறைந்தது வேலையின்மை விகிதம்!

கனடாவில் ஜூன் மாதத்தில் 18,000 புதிய வேலைவாய்ப்புகள்; 6.5% ஆகக் குறைந்தது வேலையின்மை விகிதம்!

4 நாட்கள் முன்னர்
கிளிநொச்சியில்  34 வியாபாரிகளுக்கு கடைகள் கையளிப்பு

கிளிநொச்சியில் 34 வியாபாரிகளுக்கு கடைகள் கையளிப்பு

1 நாள் முன்னர்
27 மில்லியன் ரூபா செலவில் புதிய வகுப்பறை கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டல்

27 மில்லியன் ரூபா செலவில் புதிய வகுப்பறை கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டல்

4 நாட்கள் முன்னர்
யாழ்.சிறைச்சாலை உத்தியோகஸ்தரை  தாக்கிய விளக்கமறியல் கைதி

யாழ்.சிறைச்சாலை உத்தியோகஸ்தரை தாக்கிய விளக்கமறியல் கைதி

9 மணத்தியாலங்கள் முன்னர்
வரி செலுத்தாவிடின் சிறை செல்ல நேரிடும் –  அமைச்சர் பிமல் ரத்நாயக்க

வரி செலுத்தாவிடின் சிறை செல்ல நேரிடும் – அமைச்சர் பிமல் ரத்நாயக்க

1 நாள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In