EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
மட்டக்களப்பில் 3 மோட்டார் சைக்கிள்களை திருடிய நபர் கைது

மட்டக்களப்பில் 3 மோட்டார் சைக்கிள்களை திருடிய நபர் கைது

ஆடி 19, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

மட்டக்களப்பில் விற்பனைக்கு உள்ள மோட்டார் சைக்கிளை வழங்குவதாக தெரிவித்து அதனை ஓடிப்பார்ப்பதாக எடுத்துக் கொண்டு திருடிச் சென்ற 27 வயதுடைய திருடன் இன்று ஞாயிற்றுக்கிழமை (19) கைது செய்யப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளை திருடிய நபர் சத்துருக்கொண்டான் பகுதியைச் சேர்ந்தவர் என்றும் அவரிடமிருந்து 3 மோட்டார் சைக்கிள்களை மீட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.

இதுபற்றி தெரியவருவதாவது,

குறித்த நபர் காத்தான்குடி பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் வாங்கி விற்பனை செய்யும் கடை ஒன்றுக்கு கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் சென்று அங்கு விற்பனைக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை வாங்குவதாகவும் அதனை ஓடி பார்க்க வேண்டும் என்றதையடுத்து நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிளை கடை உரிமையாளர் குறித்த நபரிடம் கொடுத்தார்.

இதனையடுத்து குறித்த நபர் மோட்டார் சைக்கிளை அங்கிருந்து எடுத்து கொண்டு, மட்டு திருகோணமலை வீதியில் உள்ள வீதி சமிக்ஞை விளக்கிற்கு அருகில் நிறுத்தி Ikman.lk இணையத்தளத்தில் மோட்டார் சைக்கிள் விற்பனைக்கு என விளம்பரப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் கொக்கட்டிச் சோலை பகுதியைச் சேர்ந்தவரை தொடர்பு கொண்டு அந்த மோட்டார் சைக்கிளை வாங்குவதாகவும் உடன் குறித்த வீதி சமிக்ஞை விளக்குக்கு அருகில் வருமாறு அழைத்துள்ளார்.

இதனை தொடர்ந்து மோட்டார் சைக்கிளை விற்பனை செய்யும் நபர் குறித்த பகுதிக்கு வந்ததும் அவரிடம் அந்த மோட்டார் சைக்கிளை ஓடி பார்க்க வேண்டும் என தெரிவித்து காத்தான்குடியில் இருந்து ஓடி பார்ப்பதாக திருடி வந்த மோட்டார் சைக்கிளை அவரிடம் கொடுத்துவிட்டு குறித்த நபரின் மோட்டார் சைக்கிளை எடுத்துச் சென்று வாகரையில் விற்பனை செய்துள்ளார்.

இவ்வாறு 2023ம் ஆண்டு ஒரு மோட்டார் சைக்கிளையும் திருடி விற்பனை செய்துள்ளதாக பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து குறித்த நபரை கைது செய்ததுடன் திருடப்பட்ட 3 மோட்டார் சைக்கிள்களையும் மீட்டதுடன், குறித்த நபர் கடந்த காலத்தில் 8 குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டு கைது செய்யப்பட்டு நீதிமன்ற பிணையில் வெளிவந்துள்ளதாகவும் இவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

“விஞ்ஞானி டெனிஸ் லூ மீதான விசாரணையைத் தன்னிச்சையாகத் தொடங்கவில்லை” நீதிமன்றத்தில் விளக்கம் அளித்தது கனேடிய உளவு அமைப்பு
அண்மைய செய்திகள்

“விஞ்ஞானி டெனிஸ் லூ மீதான விசாரணையைத் தன்னிச்சையாகத் தொடங்கவில்லை” நீதிமன்றத்தில் விளக்கம் அளித்தது கனேடிய உளவு அமைப்பு

ஆடி 21, 2026
ஒன்டாரியோ காட்டுத்தீப் புகையால் அமெரிக்கக் காற்றுக்கு மாசுபாடு: பிரதமர் கார்னியை எச்சரித்த டொனால்ட் ட்ரம்ப்
அண்மைய செய்திகள்

ஒன்டாரியோ காட்டுத்தீப் புகையால் அமெரிக்கக் காற்றுக்கு மாசுபாடு: பிரதமர் கார்னியை எச்சரித்த டொனால்ட் ட்ரம்ப்

ஆடி 21, 2026
ருவாண்டா இனப்படுகொலையில் தொடர்புடைய குற்றவாளி, ஒட்டாவாவில் கைது
அண்மைய செய்திகள்

ருவாண்டா இனப்படுகொலையில் தொடர்புடைய குற்றவாளி, ஒட்டாவாவில் கைது

ஆடி 21, 2026
கியூபெக் – ஒகா பூங்கா ஏரியில் காணாமல்போன இளைஞரைத் தேடும் பணிகள் தீவிரம்
அண்மைய செய்திகள்

கியூபெக் – ஒகா பூங்கா ஏரியில் காணாமல்போன இளைஞரைத் தேடும் பணிகள் தீவிரம்

ஆடி 21, 2026
மாநகராட்சி தடையை மீறி கனேடிய தேசிய புகையிரத நிறுவனம் (CN) மொன்றியலில் களைகொல்லி தெளித்ததால் சர்ச்சை!
அண்மைய செய்திகள்

மாநகராட்சி தடையை மீறி கனேடிய தேசிய புகையிரத நிறுவனம் (CN) மொன்றியலில் களைகொல்லி தெளித்ததால் சர்ச்சை!

ஆடி 21, 2026
இந்தியாவில் டெங்குவுக்கு முதல் தடுப்பூசி… QDENGA-க்கு அதிகாரப்பூர்வ அனுமதி!
அண்மைய செய்திகள்

இந்தியாவில் டெங்குவுக்கு முதல் தடுப்பூசி… QDENGA-க்கு அதிகாரப்பூர்வ அனுமதி!

ஆடி 20, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

சிறப்புச் செய்திகள்

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 38ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்று  நடைபெற்றது

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 38ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்று நடைபெற்றது

14 மணத்தியாலங்கள் முன்னர்
மொன்றியல்(Montreal) வீடியோ கேம் வடிவமைப்பாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் ஒன்றிணைந்து மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம்

மொன்றியல்(Montreal) வீடியோ கேம் வடிவமைப்பாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் ஒன்றிணைந்து மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம்

4 நாட்கள் முன்னர்
அடர்ந்த கானகத்தைக் கடந்து கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்

அடர்ந்த கானகத்தைக் கடந்து கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்

6 நாட்கள் முன்னர்
“விஞ்ஞானி டெனிஸ் லூ மீதான விசாரணையைத் தன்னிச்சையாகத் தொடங்கவில்லை” நீதிமன்றத்தில் விளக்கம் அளித்தது கனேடிய உளவு அமைப்பு

“விஞ்ஞானி டெனிஸ் லூ மீதான விசாரணையைத் தன்னிச்சையாகத் தொடங்கவில்லை” நீதிமன்றத்தில் விளக்கம் அளித்தது கனேடிய உளவு அமைப்பு

5 மணத்தியாலங்கள் முன்னர்
கனேடிய ஆயுதப் படைகளுக்கு புதிய போர்க் கவச வாகனங்கள்! – உள்நாட்டிலேயே கொள்வனவு செய்யுமாறு உத்தரவிட்டார் பிரதமர் மார்க் கார்னி

கனேடிய ஆயுதப் படைகளுக்கு புதிய போர்க் கவச வாகனங்கள்! – உள்நாட்டிலேயே கொள்வனவு செய்யுமாறு உத்தரவிட்டார் பிரதமர் மார்க் கார்னி

3 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In