EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு கியூபெக்
கியூபெக்கில் தீ விபத்து –  உயிரிழந்த பெண் தொடர்பான விசாரணைகள் ஆரம்பம்

கியூபெக்கில் தீ விபத்து – உயிரிழந்த பெண் தொடர்பான விசாரணைகள் ஆரம்பம்

ஆடி 20, 2026
வகை: கியூபெக், முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

கியூபெக் நகருக்கு அருகிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி, பெண் ஒருவர் உயிரிழந்துள்ளமை தொடர்பான விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கியூபெக் நகருக்கு மேற்கே சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள செயிண்ட்-அகஸ்டின்-டி-டெஸ்மௌரெஸ் (Saint-Augustin-de-Desmaures) நகரசபையின் ழான்-ஜூனோ வீதியில் (Jean-Juneau Street) அமைந்திருந்ததும், 42 அலகுகளைக் கொண்டதுமான குடியிருப்புத் தொகுதியிலேயே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

குறிப்பிட்ட குடியிருப்புக் கட்டடத்தின் இரண்டாம் தளத்தில் அமைந்துள்ள வீடொன்றிலிருந்து கடுமையான புகையும் தீப்பிழம்புகளும் வெளியேறுவதைக் கண்ட அப்பகுதி மக்கள், அவசர உதவி இலக்கத்துக்கு உடனடியாகத் தகவல் தெரிவித்தனர்.

தகவல் கிடைத்த சில நிமிடங்களிலேயே சம்பவ இடத்திற்கு விரைந்த 40க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், தீயைக் கட்டுப்படுத்தும் பணிகளிலும் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் நடவடிக்கைகளிலும் தீவிரமாக ஈடுபட்டனர்.

தீப்பிடித்து எரிந்த வீட்டின் உள்ளே மேற்கொள்ளப்பட்ட தீவிரத் தேடுதலின் போது, சுயநினைவை இழந்த நிலையில் பெண் ஒருவர் கண்டெடுக்கப்பட்டார்.

மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்தப் பெண், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகக் கியூபெக் நகரின் தீயணைப்புத் துறைச் செய்தித் தொடர்பாளர் அலெக்சாண்டர் லாஜோய் (Alexandre Lajoie) உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்தத் தீ விபத்தில் வேறு எவருக்கும் காயங்களோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தீயணைப்பு வீரர்களின் விரைவான செயல்பாட்டினால் தீ அடுத்தடுத்த வீடுகளுக்குப் பரவாமல் தடுக்கப்பட்ட போதிலும், தீ விபத்து நிகழ்ந்த இரண்டாம் தளத்து வீடு மற்றும் அதற்கு நேர் கீழே அமைந்துள்ள முதலாவது தளத்து வீடு ஆகிய இரண்டும் கடுமையான புகையினாலும் தீயினாலும் சேதமடைந்துள்ளன.

இதனால், அந்த வீடுகளில் குடியிருந்தவர்கள் மீண்டும் அங்கு தங்குவதற்குத் தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கனடாவிலிருந்து  இறக்குமதியாகும்  பொருட்களுக்கு 50 சதவீத கூடுதல் வரி விதிக்க தீர்மானம் –  அமெரிக்க அதிபர்
கனடா

கனடாவிலிருந்து  இறக்குமதியாகும் பொருட்களுக்கு 50 சதவீத கூடுதல் வரி விதிக்க தீர்மானம் – அமெரிக்க அதிபர்

ஆடி 21, 2026
கியூபெக் – ஒகா பூங்கா ஏரியில் காணாமல்போன இளைஞரைத் தேடும் பணிகள் தீவிரம்
அண்மைய செய்திகள்

கியூபெக் – ஒகா பூங்கா ஏரியில் காணாமல்போன இளைஞரைத் தேடும் பணிகள் தீவிரம்

ஆடி 21, 2026
மாநகராட்சி தடையை மீறி கனேடிய தேசிய புகையிரத நிறுவனம் (CN) மொன்றியலில் களைகொல்லி தெளித்ததால் சர்ச்சை!
அண்மைய செய்திகள்

மாநகராட்சி தடையை மீறி கனேடிய தேசிய புகையிரத நிறுவனம் (CN) மொன்றியலில் களைகொல்லி தெளித்ததால் சர்ச்சை!

ஆடி 21, 2026
கியூபெக்கில் போராட்டத்தை முன்னெடுத்துள்ள  சர்வதேச மாணவர்கள்
கியூபெக்

கியூபெக்கில் போராட்டத்தை முன்னெடுத்துள்ள  சர்வதேச மாணவர்கள்

ஆடி 20, 2026
வெஸ்ட்மவுண்ட் நகரசபை மேயர் மீது பதிவான எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கள்
கியூபெக்

வெஸ்ட்மவுண்ட் நகரசபை மேயர் மீது பதிவான எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கள்

ஆடி 20, 2026
மொன்றியல் நகரில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் – ஒருவர்  படுகாயம்
கியூபெக்

மொன்றியல் நகரில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் – ஒருவர்  படுகாயம்

ஆடி 20, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

சிறப்புச் செய்திகள்

கிளிநொச்சியில் அனுமதிப் பத்திரத்தை தவறாக பயன்படுத்தி மணல் அகழ்வில் ஈடுபட்ட ஐவர் கைது

கிளிநொச்சியில் அனுமதிப் பத்திரத்தை தவறாக பயன்படுத்தி மணல் அகழ்வில் ஈடுபட்ட ஐவர் கைது

23 மணத்தியாலங்கள் முன்னர்
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை அசைக்க முடியாது – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை அசைக்க முடியாது – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

7 நாட்கள் முன்னர்
தமிழ் பிரதிநிதிகள் என சொல்பவர்கள் தரகு வேலை பார்க்கின்றார்கள் – க.இளங்குமரன்

தமிழ் பிரதிநிதிகள் என சொல்பவர்கள் தரகு வேலை பார்க்கின்றார்கள் – க.இளங்குமரன்

6 நாட்கள் முன்னர்
யாழ் வலி வடக்கை உயர் பாதுகாப்பு வலயமாக்கிய வர்த்தமானியை  நீக்கு

யாழ் வலி வடக்கை உயர் பாதுகாப்பு வலயமாக்கிய வர்த்தமானியை நீக்கு

4 நாட்கள் முன்னர்
கனேடிய ஆயுதப் படைகளுக்கு புதிய போர்க் கவச வாகனங்கள்! – உள்நாட்டிலேயே கொள்வனவு செய்யுமாறு உத்தரவிட்டார் பிரதமர் மார்க் கார்னி

கனேடிய ஆயுதப் படைகளுக்கு புதிய போர்க் கவச வாகனங்கள்! – உள்நாட்டிலேயே கொள்வனவு செய்யுமாறு உத்தரவிட்டார் பிரதமர் மார்க் கார்னி

4 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In