கனேடிய உற்பத்திகளுக்கு புதிய வரி விதிப்பு தொடர்பான அமெரிக்க அதிபரின் அறிவிப்புக்குக் பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கை, வடஅமெரிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தமான ‘கனடா-அமெரிக்கா-மெக்சிகோ ஒப்பந்தத்தை’ (CUSMA) மீறும் ஒருதலைப்பட்சமான செயல் என, அவர் விமர்சித்துள்ளார்.
அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளுக்கு இடையிலான CUSMA ஒப்பந்தத்தை புதுப்பிப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஸ்தம்பித்துள்ள பின்னணியிலேயே, டொனால்ட் டிரம்பின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்காவின் இந்த அதிரடி நடவடிக்கை கனேடிய ஏற்றுமதியாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை, “இந்த வரிவிதிப்பு கனடாவுடனான வர்த்தகப் போர் அல்ல; மாறாக தமது வர்த்தகத்தைப் பாதுகாப்பதற்கான தற்காப்பு நடவடிக்கை” என அமெரிக்க நிர்வாகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத் தக்கது.











