EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு கியூபெக்
கனேடிய மத்திய மேல்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு

கனேடிய மத்திய மேல்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு

புரட்டாதி 4, 2026
வகை: கியூபெக்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

பிரசவ மற்றும் பெற்றோர் பராமரிப்பு விடுப்பில் (Maternity and Parental Leave) இருந்தபோது அல்லது விடுப்பு முடிவடைந்த  உடனேயே வேலைவாய்ப்பை இழந்த பெண்களுக்கு, வழக்கமான வேலைவாய்ப்பு காப்புறுதிச் (EI) சலுகைகளை மறுப்பது பாலினப் பாகுபாடானது என்றும், நாட்டின் அரசியலமைப்பு உரிமைகளை மீறுவதாகும் என்றும் நாட்டின் மத்திய மேல்முறையீட்டு நீதிமன்றம் (Federal Court of Appeal) வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது.

கியூபெக் மாகாணத்தைச் சேர்ந்த ஆறு தாய்மார்கள் தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு, ஒருமனதாக இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.

தற்போதைய வேலைவாய்ப்பு காப்புறுதிச் சட்டத்தின் சில பகுதிகள் பாலினப் பாகுபாட்டை ஊக்குவிக்கும் வகையில்  அமைந்திருப்பதாகச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், அவை கனடிய உரிமைகள் மற்றும் சுதந்திரங்களுக்கான சாசனத்தின் (Canadian Charter of Rights and Freedoms) 15-வது பிரிவை மீறுவதாகத் தெரிவித்தனர்.

பிரசவ விடுப்புக் காலத்தில் வேலைநீக்கம் செய்யப்பட்ட இந்த ஆறு தாய்மார்களும், தாங்கள் ஏற்கனவே பிரசவகாலச் சலுகைகளைப் பெற்றதால், வேலை இழப்பிற்கான வழக்கமான சலுகைகளைப் பெறத் தகுதியற்றவர்கள் எனத் தெரிவித்து நிராகரிக்கப்பட்டிருந்தனர்.

சட்டத்தின் சில விதிகள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவாகப்  பொருந்தினாலும்,  கர்ப்பமடைவதும்  குழந்தையைப்  பெற்றெடுப்பதும் பெண்களே என்பதால், இச்சட்டம் பெண்களையே அதிகளவில் நெகிழ்வற்ற முறையில் பாதிக்கிறது என நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

பிரசவகாலச் சலுகைகளையும் வேலை இழப்புச் சலுகைகளையும் ஒன்று சேர்த்துப் பெறுவதைக் கட்டுப்படுத்தும் இச்சட்ட விதிகள், தாய்மார்களின் பொருளாதாரச் சுமையையும் நலிவுற்ற நிலையையும் மேலும் அதிகரிப்பதாக, நீதிமன்றத்  தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மொண்ட்ரியலில் பெற்றோரைக் தாக்கிய குற்றச்சாட்டில் 26 வயது இளைஞர் கைது
கியூபெக்

மொண்ட்ரியலில் பெற்றோரைக் தாக்கிய குற்றச்சாட்டில் 26 வயது இளைஞர் கைது

புரட்டாதி 7, 2026
மொண்ட்ரியலில் தீக்கிரையான எஸ்.யு.வி ரக சொகுசு வாகனங்கள் தொடர்பான  விசாரணைகள் ஆரம்பம்
கியூபெக்

மொண்ட்ரியலில் தீக்கிரையான எஸ்.யு.வி ரக சொகுசு வாகனங்கள் தொடர்பான விசாரணைகள் ஆரம்பம்

புரட்டாதி 7, 2026
தேர்தல் பிரச்சாரப் பணிகளைத் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ள கிறிஸ்டின் ஃபிரஷெட்
கியூபெக்

தேர்தல் பிரச்சாரப் பணிகளைத் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ள கிறிஸ்டின் ஃபிரஷெட்

புரட்டாதி 7, 2026
ஓட்டிசம் குறைபாட்டினால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு புதிய பாடசாலையில் அனுமதி
கியூபெக்

ஓட்டிசம் குறைபாட்டினால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு புதிய பாடசாலையில் அனுமதி

புரட்டாதி 4, 2026
மொண்ட்ரியல் பொலிஸ் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு
கியூபெக்

மொண்ட்ரியல் பொலிஸ் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

புரட்டாதி 4, 2026
வாக்காளர் தகவல் ஆவணங்களை அனுப்புவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள  கியூபெக் லிபரல் கட்சி
கியூபெக்

வாக்காளர் தகவல் ஆவணங்களை அனுப்புவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள  கியூபெக் லிபரல் கட்சி

புரட்டாதி 4, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

சிறப்புச் செய்திகள்

ஸ்டான்லி நீர்த்தேக்கத்தின் வான்கதவுகளை தமிழக முதல்வர் விஜய் இன்று திறந்து வைத்தார்

ஸ்டான்லி நீர்த்தேக்கத்தின் வான்கதவுகளை தமிழக முதல்வர் விஜய் இன்று திறந்து வைத்தார்

6 நாட்கள் முன்னர்
தென்னிந்திய திருச்சபையினரால் அரச காணியில் சட்டவிரோதமாக வெட்டப்பட்ட தேக்கு மரங்கள்

தென்னிந்திய திருச்சபையினரால் அரச காணியில் சட்டவிரோதமாக வெட்டப்பட்ட தேக்கு மரங்கள்

2 நாட்கள் முன்னர்
வெல்லம்பிட்டியவில் 130 மின்னணு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

வெல்லம்பிட்டியவில் 130 மின்னணு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

5 நாட்கள் முன்னர்
போதைப்பொருள் அற்ற நாடாக கட்டியெழுப்பு சகலரும் கைகோர்க்க வேண்டும் – அந்தனிசில் ராஜ்குமார்

போதைப்பொருள் அற்ற நாடாக கட்டியெழுப்பு சகலரும் கைகோர்க்க வேண்டும் – அந்தனிசில் ராஜ்குமார்

1 மணத்தியாலம் முன்னர்
யோஷிதவின் மேல்முறையீடு திரும்பப் பெற அனுமதி

யோஷிதவின் மேல்முறையீடு திரும்பப் பெற அனுமதி

50 minutes முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In