EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
குருக்கள்மடம் பகுதியில் மனித எலும்புத் தொகுதிகள் வெட்டுக் காயங்களுடன் மீட்பு

குருக்கள்மடம் பகுதியில் மனித எலும்புத் தொகுதிகள் வெட்டுக் காயங்களுடன் மீட்பு

ஐப்பசி 15, 2026
வகை: இலங்கை, முதன்மை செய்தி
A A
Share on FacebookShare on Twitter

மட்டக்களப்பு, குருக்கள்மடம் பகுதியில் அடையாளம் காணப்பட்ட சந்தேகத்திற்குரிய மனிதப் புதைகுழி அகழ்வின்போது, மண்டை ஓடுகள் உள்ளிட்ட மனித எலும்புத் தொகுதிகள் வெட்டுக் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி
முபாறக் மு அஸ்ஸம் தெரிவித்துள்ளார்.

கடந்த 06ஆம் திகதி முதல் நேற்று (14) வரை, களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைவாக ஒன்பது நாட்களாக இடம்பெற்ற அகழ்வுப் பணிகளின் இரண்டாம் கட்டம் நேற்று நிறைவடைந்தது.

அகழ்வின்போது கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள் மற்றும் ஏனைய பொருட்கள் நீதிமன்றத்தில் சான்றுப் பொருட்களாக ஒப்படைக்கப்பட்டுள்ளன.

அவை மேலதிக பகுப்பாய்வுகளுக்காக சட்ட வைத்திய அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அகழ்வுப் பணிகளை முன்னெடுத்த தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ மற்றும் சட்ட வைத்திய அதிகாரிகளின் அறிக்கைகள் கிடைத்த பின்னரே, இந்த விவகாரம் தொடர்பான முழுமையான தகவல்களை வெளியிட முடியும்.

மேலும், குறித்த பகுதியில் செயற்கையான கட்டமைப்பு மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதற்கான அறிகுறிகள் காணப்படுவதாகவும், மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்ட பகுதிக்கு மேலாகக் குப்பைகள் போடப்பட்டு மறைக்கப்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்ததாகவும் முபாறக் மு அஸ்ஸம் கூறியுள்ளார்.

இந்தப் பகுதி குற்றம் இடம்பெற்ற இடமாக இருக்கக்கூடும் என்பதற்கான பல்வேறு காரணிகள் காணப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், சம்பந்தப்பட்ட அறிக்கைகள் கிடைத்த பின்னர் நீதிமன்றத்தின் ஊடாக அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றார்.

அறிக்கைகள் பெரும்பாலும் இரண்டு வாரங்களுக்குள் கிடைக்கப்பெறும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்
அண்மைய செய்திகள்

மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

ஐப்பசி 16, 2026
வட்டவளை பகுதியில்  இரு வாகனங்கள் மோதி விபத்து
அண்மைய செய்திகள்

வட்டவளை பகுதியில் இரு வாகனங்கள் மோதி விபத்து

ஐப்பசி 16, 2026
தொடர் மழையால் ஹப்புத்தளை நகரில் வெள்ளம்
அண்மைய செய்திகள்

தொடர் மழையால் ஹப்புத்தளை நகரில் வெள்ளம்

ஐப்பசி 16, 2026
ஷிரந்தியை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு!
இலங்கை

ஷிரந்தியை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு!

ஐப்பசி 16, 2026
யாழில் 190 மில்லியன் ரூபா செலவில் நிலத்தடி நீர் முகாமைத்துவப் பிரிவு!
அண்மைய செய்திகள்

யாழில் 190 மில்லியன் ரூபா செலவில் நிலத்தடி நீர் முகாமைத்துவப் பிரிவு!

ஐப்பசி 16, 2026
யாழ்ப்பாணக் கோட்டைக்கு கியூபா தூதுவர் விஜயம்!
அண்மைய செய்திகள்

யாழ்ப்பாணக் கோட்டைக்கு கியூபா தூதுவர் விஜயம்!

ஐப்பசி 16, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

சிறப்புச் செய்திகள்

பள்ளமடு பகுதியில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு

பள்ளமடு பகுதியில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு

5 நாட்கள் முன்னர்

மாற்றுத்திறனாளிகளுக்கான மாகாண மட்ட மெய்வல்லுநர் போட்டி

3 நாட்கள் முன்னர்
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

5 நாட்கள் முன்னர்
தேசிய குத்துச்சண்டைப் போட்டியில் மல்லாவி மத்திய கல்லூரி சாதனை

தேசிய குத்துச்சண்டைப் போட்டியில் மல்லாவி மத்திய கல்லூரி சாதனை

6 நாட்கள் முன்னர்
யாழ்ப்பாணக் கோட்டைக்கு கியூபா தூதுவர் விஜயம்!

யாழ்ப்பாணக் கோட்டைக்கு கியூபா தூதுவர் விஜயம்!

13 மணத்தியாலங்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check