EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு கனடா
நோவா ஸ்கோடியாவில் பிரம்மாண்ட AI தரவு மையம்!

நோவா ஸ்கோடியாவில் பிரம்மாண்ட AI தரவு மையம்!

ஐப்பசி 17, 2026
வகை: கனடா
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

நோவா ஸ்கோடியா மாகாணத்தின் கேப் பிரட்டன் தீவுப் பகுதியில், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்திற்கான பாரிய தரவு மையம் (Data Centre) ஒன்றை அமைப்பதற்கான முதற்கட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

‘எவர்விண்ட் ஃபியூல்ஸ்’ (EverWind Fuels) நிறுவனத்தால் முன்னெடுக்கப்படும் இத்திட்டத்திற்காகப் பிரைவேட் மூலதனம் மூலம் 8 பில்லியன் டொலர் திரட்டப்படவுள்ளதுடன், இதனுடன் இணைந்த காற்றாலை மின் திட்டங்களுக்காக மேலும் 2 பில்லியன் டொலர் முதலீடு செய்யப்படவுள்ளது.

போர்ட் ஹாக்கேஸ்பரிக்கு அருகில் உள்ள பாயிண்ட் டப்பர் தொழிற்பூங்காவில் அமைக்கப்படவுள்ள இத்தரவு மையமானது இரண்டு கட்டங்களாகச் செயற்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டப் பணிகள் 2027ஆம் ஆண்டின் இறுதிக்குள் செயல்பாட்டுக்கு வரும் என்றும், இரண்டாம் கட்டம் 2028ஆம் ஆண்டில் நிறைவடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அவுஸ்திரேலிய-அமெரிக்க முதலீட்டு நிபுணர் ட்ரென்ட் விச்சி (Trent Vichie) தலைமையிலான எவர்விண்ட் நிறுவனம், இந்தத் தரவு மையத்தை நிர்மாணித்து இயக்குகிறது. அத்துடன், பெயர் வெளியிடப்படாத முன்னணி செயற்கை நுண்ணறிவு நிறுவனம் ஒன்றுக்கு இதன் முதற்கட்டத்தைக் குறைந்தபட்சம் 20 ஆண்டுகளுக்குக் குத்தகைக்கு விடுவதற்கான உடன்படிக்கையையும் நிறுவனம் செய்துடைத்துள்ளது.

இதற்கான மின் உற்பத்தித் திட்டத்தின் முதற்கட்டத்தின் மூலம் 95 மெகாவாட் மின்சாரமும், இரண்டாம் கட்டத்தின் மூலம் 325 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தியாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த மின் உற்பத்தி திறன் 420 மெகாவாட்டாக உயரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நோவா ஸ்கோடியா மாகாணத்தின் தற்போதைய ஒட்டுமொத்த மின் உற்பத்தி திறன் சுமார் 3,000 மெகாவாட் என்பது குறிப்பிடத்தக்கது.

மின்சார விநியோகம் மற்றும் சுற்றுச்சூழல் தாக்கங்கள் குறித்துப் பேசியுள்ள நிறுவனத்தின் தலைமை அதிகாரி ட்ரென்ட் விச்சி, மாகாணத்தின் மின் கட்டமைப்பைப் பாதுகாப்பதிலும், உள்ளூர் வாடிக்கையாளர்களின் நலன்களை உறுதிப்படுத்துவதிலும் நிறுவனம் முழுப் பொறுப்புடன் செயற்படும் எனத் தெரிவித்துள்ளார். நோவா ஸ்கோடியா மாகாணத்தின் மின்கட்டமைப்பு இத்திட்டத்தின் முதற்கட்டச் சுமையைத் தாங்கக்கூடியது என மாகாண மின்சாரக் கட்டமைப்பு ஆய்விலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அல்போட்டா பொது வாக்கெடுப்பு: இறுதி கட்டத்தை எட்டிய பிரசாரம்!
கனடா

அல்போட்டா பொது வாக்கெடுப்பு: இறுதி கட்டத்தை எட்டிய பிரசாரம்!

ஐப்பசி 17, 2026
அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் கனேடியத் தலையீடுகள்!
கனடா

அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் கனேடியத் தலையீடுகள்!

ஐப்பசி 15, 2026
பிளாக் ஹோக் ரக ஹெலிகொப்டர்கள் கொள்வனவுத் திட்டம் தற்காலிகமாக நிறுத்தம்!
கனடா

பிளாக் ஹோக் ரக ஹெலிகொப்டர்கள் கொள்வனவுத் திட்டம் தற்காலிகமாக நிறுத்தம்!

ஐப்பசி 15, 2026
கனடாவில் கடத்தல் வழக்கில் மேலும் ஒரு ராணுவ வீரர் கைது
கனடா

கனடாவில் கடத்தல் வழக்கில் மேலும் ஒரு ராணுவ வீரர் கைது

ஐப்பசி 15, 2026
கூடுதல் நிதி இருந்தும் பாதுகாப்புத் துறைக்கு நெருக்கடி!
கனடா

கூடுதல் நிதி இருந்தும் பாதுகாப்புத் துறைக்கு நெருக்கடி!

ஐப்பசி 13, 2026
ஒன்டாரியோவில் முதியோர் பராமரிப்பில் புதிய திட்டம் – அரசின் செலவைப் பாதியாகக் குறைக்க வாய்ப்பு!
கனடா

ஒன்டாரியோவில் முதியோர் பராமரிப்பில் புதிய திட்டம் – அரசின் செலவைப் பாதியாகக் குறைக்க வாய்ப்பு!

ஐப்பசி 11, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

சிறப்புச் செய்திகள்

தேசிய குத்துச்சண்டைப் போட்டியில் மல்லாவி மத்திய கல்லூரி சாதனை

தேசிய குத்துச்சண்டைப் போட்டியில் மல்லாவி மத்திய கல்லூரி சாதனை

7 நாட்கள் முன்னர்
யாழில் சட்டவிரோத மாட்டிறைச்சிக் கொல்களம் முற்றுகை – இருவர் கைது

யாழில் சட்டவிரோத மாட்டிறைச்சிக் கொல்களம் முற்றுகை – இருவர் கைது

4 நாட்கள் முன்னர்
கொக்குவில் பிரம்படி படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

கொக்குவில் பிரம்படி படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

5 நாட்கள் முன்னர்
கைதடி மாற்றுத்திறனாளிகள் பாடசாலை மாணவன் மீது தாக்குதல்!

கைதடி மாற்றுத்திறனாளிகள் பாடசாலை மாணவன் மீது தாக்குதல்!

3 நாட்கள் முன்னர்
மட்டக்களப்பில் சட்டவிரோத சுருக்கு வலை மீன்பிடிக்கு எதிராக மீனவர்கள் போராட்டம்!

மட்டக்களப்பில் சட்டவிரோத சுருக்கு வலை மீன்பிடிக்கு எதிராக மீனவர்கள் போராட்டம்!

15 மணத்தியாலங்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check