தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து இலங்கைக்குக் கடத்த முயன்ற இரண்டு இலட்சம் வலி நிவாரணி மாத்திரைகள், 531 கிலோ சுக்கு மற்றும் 1,500 மஞ்சள் பொதி பாக்கெட்டுகளைப் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
வேதாளை பகுதியில் இலங்கைக்குக் கடத்துவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மாத்திரைகளை கியூ பிரிவு
மீட்டுள்ளனர். இவற்றின் சர்வதேச மதிப்பு சுமார் 3 கோடி இந்திய ரூபாய் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, புதுமடம் கடற்கரைப் பகுதியில் 531 கிலோ சுக்கு மற்றும் 1,500 மஞ்சள் பொதி பாக்கெட்டுகள் ஏற்றப்பட்டிருந்த படகொன்றையும் மரைன் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இந்தச் சம்பவங்கள் தொடர்பாகத் தப்பியோடியவர்களைத் தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளும் இடம்பெற்று வருகின்றன.











