EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
சிங்களமொழியை பாதுகாப்பது போல தமிழ் மொழியை பாதுகாப்பேன் – நாமல் ராஜபக்ஸ

சிங்களமொழியை பாதுகாப்பது போல தமிழ் மொழியை பாதுகாப்பேன் – நாமல் ராஜபக்ஸ

புரட்டாதி 10, 2024
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
A A
Share on FacebookShare on Twitter

பௌத்த கலாச்சாரத்தால் உருவாக்கப்பட்ட இந்த நாடு ஏனைய இன மக்களின் கலாச்சாரத்துக்கு முக்கியத்துவம் வழங்கும் என நம்புகின்றேன். இருந்தபோதும் தாய்மொழியை மறக்கும் காலம் வந்துவிட்டது எனவே நான் எனது சிங்கள மொழியை பாதுகாப்பது போல தமிழ் மொழியை பாதுகாப்பேன், அதேவேளை நான் கலாச்சாரத்தை நம்புகின்றேன் எனவே ஏனைய இன மக்களின் கலாச்சாரத்துக்கு முக்கியத்துவம் வழங்குவேன் என ஸ்ரீ லங்கா பெரமுன கட்சி ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்தார்.

மட்டக்களப்பு சண்றைஸ் ஹோட்டலில் ஸ்ரீ லங்கா பெரமுன கட்சியின் மாவட்ட அமைப்பாளர் தம்பிமுத்து தயாபரன் தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை (10) இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்ட நாமல் ராஜபக்ஸ இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையற்றுகையில்

காலி, அம்பாந்தோட்டையில் இடம்பெற்ற அபிவிருத்தியை மட்டக்களப்பிற்கு கொண்டுவரவேண்டும் அதற்காகத்தான் மகிந்த ராஜபக்ஸ தலைமையில் வீதிகளை அபிவிருத்தி செய்தோம். வீடுகளை அமைத்து கொடுத்தோம். சுற்றுலாவை அபிவிருத்தி செய்தோம். அதன் மூலமாக இந்த பிரதேசங்களில் தொழில்வாய்ப்பு எற்படுத்தப்பட்டது.

அதேவேளை மத்தளை விமான நிலையத்தில் இருந்து மட்டக்களப்பு வரையும் அதிவேக நெடுஞ்சாலை பாதை அமைக்க எங்களுடைய திட்டம் ஒன்று இருந்தது. அது ஆட்சிக்கு வந்த ஆட்சியாளர்கள் நிறுத்திவிட்டனர். எனவே நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மத்தளையில் இருந்து மட்டக்களப்பிற்கு அதிவேக பாதை அமைப்போம் என உறுதியாக கூறுகின்றோம். அதன் மூலம் அம்பாந்தோட்டையுடன் மட்டக்களப்பு திருகோணமலை அம்பாறை மாவட்டங்களுக்கிடையிலான உறவு ஏற்படுவதுடன் சுற்றுலாதுறை மேலும் அபிவிருத்தியடையும்.

இந்த பிரதேசத்தில் பிடிக்கப்படும் மீன்கள் மற்றும் உற்பத்தி பொருட்களை கொழும்பிற்கு இலகுவாக கொண்டு செல்லமுடியும் எனவே எங்களுக்கு தேவை இந்த நாட்டை அபிவிருத்திக்கு கொண்டு செல்லவதற்கு இந்த இளைஞர் யுவதிகளுக்கு வளமான எதிர்காலம் ஒன்றை உருவாக்க வேண்டும்.

இந்த பிரதேசத்திலுள்ள ஏல்லா அரசியல்வாதிகளும் தமிழ் முஸ்லீம் மக்களுக்கு தெரிவிப்பது அரசியல் யாப்பை மாற்றம் செய்வதாக தங்களது அரசியலை மட்டும் தெரிவிப்பார்கள் ஆனால் உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை அபிவிருத்தி செய்வதாக யாரும் பேசுவதில்லை அரசியல் யாப்பை மாற்றுவது தொடர்பாக என்னால் உறுதி கூறமுடியாது ஆனால் நாளை இளைஞர் யுவதிகளுக்கு எதிர்காலம் ஒன்றை தரமுடியும் என உறுதி கூறமுடியும் ஏன் என்றால் அந்த தேவைப்பாடு இருக்கின்றது.

இந்த நாட்டில் ஒவ்வொரு குடும்பங்களினதும் கலாச்சாரம் மிக முக்கியமானது நாங்கள் ஏனைய நாடுகளைவிட வித்தியாசமாக இருப்பதும் இந்த கலாச்சாரத்தினால் எனவே நாங்கள் தமிழர்களினதும் முஸ்லீம்களினதும் கலாச்சாரத்தை அதை பாதுக்கவேண்டும்.

க.பொ.த சாதாரண வகுப்பு மாணவர்களில் இருந்து ஆங்கில மொழி பொது மொழியாக மாற்ற வேண்டும் ஏன் ஏன்றால் அவர்கள் தொழில்வாய்ப்பை பெறவேண்டும் என்பதற்காக அது மாத்திரமல்ல ஆண்டு ஒன்று தொடக்கம் பிள்ளைகளுக்கு ஆங்கில மொழி கற்பிக்கப்பட வேண்டும. தமிழ்மொழி தமிழ் மக்களுக்கு கற்பிக்க வேண்டும் ஏன் என்றால் காலம் செல்லும்போது தன்னுடைய தாய்மொழியை மறக்கும் காலம் வந்துவிடும் எனவே நான் எனது சிங்கள மொழியை பாது காப்பது போல தமிழ் மொழியை பாதுகாப்பேன்

இந்த அரச சேவையில் தொழில் நுட்பத்தை கொண்டு வரவேண்டும் ஏன் என்றால் அவரமாக அனுமதி ஒன்றை பெறுவதற்கு கொழும்பிற்கு செல்லத் தேவையில்லை. அதனை பிரதேச செயலகத்தில் பெற்றுக் கொள்ளலாம் எனவே நீங்கள் யாரும் அலையத் தேவையில்லை பாஸ்போட் எடுக்க வரிசையில் நிற்க தேவையில்லை. இந்த அறிவுத்தன்மை குறைவினால் இந்த பிரதேசத்தில் மக்களை ஏமாற்றுகின்றனர்.

இன்று டுபாய், சவுதி நாடுகளில் ஏமாற்றப்பட்டவர்கள் அதிகமாக இருக்கின்றனர். எனவே அவர்களுக்கு நீதியை பெற்றுக் கொடுக்கவேண்டும. இந்த நாட்டில் கஷ்ட காலங்களை கடந்து வந்துள்ளோம் இனவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கின்றோம். ஆனால் தேர்தல் காலத்தில் இந்த இனவாதம் அதிகரிக்கின்றது. சில அரசியல்வாதிகள் தங்கள் அரசியல் வாழ்கைக்காக இந்த இனவாதத்தை கொண்டு போகின்றனர். அவர்கள் சிங்களவர் தமிழர்கள் முஸ்லீம்கள் என பிரிவினையை உண்டாக்குகின்றனர். அதேமாதிரி மத ரீதியாக பிரிக்கின்றனர். அவ்வாறே அரசியல் கட்சி ரீதியாக பிரிக்கின்றனர். ஆனால் நான் பிரிவினை இனவாதம் ஊடாக அரசியல் செய்வதில்லை என்னால் செய்ய முடியும் என்றால் செய்வேன் முடியாது என்றால் முடியாது என சொல்வேன்.

எனவே இளைஞர்களை அழைக்கின்றேன் நீங்கள் புதிதாக சிந்திப்பவர்கள் எனவே நீங்கள் உங்கள் எதிர்காலத்தை பற்றி சிந்திக்கவும் நீங்கள் சக்தியானவர்கள் உங்களுடைய சக்தியை பாவித்து இந்த நாட்டிற்கு ஊருக்கு வேலை செய்ய தயாராகுவோம். இலங்கை போன்று வெளிநாடுகளுக்கு சென்று கல்வி கற்போம். வர்த்தகம் விவசாயம் செய்வோம். தொழில்நுட்பத்தை உலகிற்கு கொண்டு வருவோம் எனவே உங்களை அழைக்கின்றேன். இந்த தேர்தலில் வெற்றிபெற எமக்கு உதவுவீர்கள் என நான் விரும்புகின்றேன். புதிய தலைவர்கள் உருவாகுவதற்கு கொழும்பில் இருந்து மட்டக்களப்பிற்கு வரும் தலைவர்கள் இல்லை மட்டக்களப்பில் தலைவர்கள் உருவாக வேண்டும் அதற்கு நான் உதவ உறுதியளிப்பேன் என்றார்.

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்கை தனி நாடாக்குவதற்கான ‘புளூ புக்'(Blue Book) திட்ட வழிகாட்டியை வெளியிட்ட பார்டி கியூபெகோயிஸ் கட்சி!
அண்மைய செய்திகள்

கியூபெக்கை தனி நாடாக்குவதற்கான ‘புளூ புக்'(Blue Book) திட்ட வழிகாட்டியை வெளியிட்ட பார்டி கியூபெகோயிஸ் கட்சி!

ஆனி 25, 2026
கியூபெக் மாகாண பொதுத்தேர்தலுக்கான உத்தியோகபூர்வ ஆங்கில மொழி நேரடி விவாதம் முற்றாக ரத்து!
அண்மைய செய்திகள்

கியூபெக் மாகாண பொதுத்தேர்தலுக்கான உத்தியோகபூர்வ ஆங்கில மொழி நேரடி விவாதம் முற்றாக ரத்து!

ஆனி 25, 2026
மொன்றியல் துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து விவாதிக்கப்படும்  ‘இன்செல்'(Incel) இணையக் கலாசாரம் மீதான ஆய்வுகள் தீவிரம்!
அண்மைய செய்திகள்

மொன்றியல் துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து விவாதிக்கப்படும் ‘இன்செல்'(Incel) இணையக் கலாசாரம் மீதான ஆய்வுகள் தீவிரம்!

ஆனி 25, 2026
மன்னாரில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய வடை தயாரிப்பு நிலையம் மூடல்
அண்மைய செய்திகள்

மன்னாரில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய வடை தயாரிப்பு நிலையம் மூடல்

ஆனி 23, 2026
யாழ். சர்வதேச விமான நிலையத்தில் நடராஜர் சிலையை பிரதிஷ்டை செய்யுங்கள் – சீ.வி.கே சிவஞானம்
அண்மைய செய்திகள்

யாழ். சர்வதேச விமான நிலையத்தில் நடராஜர் சிலையை பிரதிஷ்டை செய்யுங்கள் – சீ.வி.கே சிவஞானம்

ஆனி 23, 2026
பருத்தித்துறை வெளிச்ச வீட்டு பகுதியை இராணுவத்திடமிருந்து விடுவிக்க நடவடிக்கை
அண்மைய செய்திகள்

பருத்தித்துறை வெளிச்ச வீட்டு பகுதியை இராணுவத்திடமிருந்து விடுவிக்க நடவடிக்கை

ஆனி 23, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

சிறப்புச் செய்திகள்

யாழில். அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வதில் கடும் சவால் –  கடற்தொழில் அமைச்சர்

யாழில். அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வதில் கடும் சவால் – கடற்தொழில் அமைச்சர்

4 நாட்கள் முன்னர்
மொன்றியலில் ஆயுதம் ஏந்திய சந்தேக நபர் – பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

மொன்றியலில் ஆயுதம் ஏந்திய சந்தேக நபர் – பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

2 நாட்கள் முன்னர்
செம்மணி புதைகுழி தொடர்பில் நீதி நிலை நாட்டப்படும் – நீதி அமைச்சர் உறுதி

செம்மணி புதைகுழி தொடர்பில் நீதி நிலை நாட்டப்படும் – நீதி அமைச்சர் உறுதி

5 நாட்கள் முன்னர்
கிளிநொச்சியில்  மீண்டும் கரும்பு செய்கை ஆரம்பம்

கிளிநொச்சியில் மீண்டும் கரும்பு செய்கை ஆரம்பம்

1 நாள் முன்னர்
யாழில் வேலையற்ற பட்டதாரிகளால் முன்னெடுக்கப்படும்  போராட்டம்

யாழில் வேலையற்ற பட்டதாரிகளால் முன்னெடுக்கப்படும் போராட்டம்

1 நாள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In