யாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதிக்கு கடற்றொழில் அமைச்சர் வருகை தருவதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் காலை முதல் மாலை வரை மீனவர்கள் காத்திருந்த போதிலும் அமைச்சர் வருகை தராததால் மீனவர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
சுழிபுரம் காட்டுப்புலம் மீனவர்களை நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் கடற்தொழிலாளர் மண்டபத்தில் ஒன்று கூடுமாறும் கடற்றொழில் அமைச்சர் உட்பட்ட குழு வருகை தரும் என பிரதேச கடற்றொழில் பரிசோதகர் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் மீனவர்கள் ஒன்று கூடியிருந்த போதிலும் கடற்தொழில் அமைச்சர் வருகை தராததால் பல மணிநேரம் மீனவர்கள் காத்திருந்து ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.