EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
ஒட்டுசுட்டானில் பனை,தென்னைவள கூட்டுறவுச்சங்க உற்பத்திகளை சந்தைப்படுத்துவதில் சிக்கல்….

ஒட்டுசுட்டானில் பனை,தென்னைவள கூட்டுறவுச்சங்க உற்பத்திகளை சந்தைப்படுத்துவதில் சிக்கல்….

சித்திரை 15, 2025
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
A A
Share on FacebookShare on Twitter

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பனை, தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச்சங்கம் தமது உற்பத்திகளைச் சந்தைப்படுத்துவதில் சிக்கல் நிலையை எதிர்கொள்வதால், குறித்த கூட்டுறவுச் சங்கத்தில் அங்கம் வகிக்கும் தொழிலாளர்கள் பெரும் வாழ்வாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

இந் நிலையில் ஒட்டுசுட்டான் பனைதென்னைவள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தின் அழைப்பை ஏற்று இன்று (15.04.2025) நிலமைகளை நேரில் சென்று ஆராய்ந்த வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்கள், ஒட்டுசுட்டான் பனை, தென்னைவள அபிவிருத்திக் கூட்டுறவுச்சங்கத்தில் அங்கம் வகிக்கும் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக்குத் தீர்வுகாணவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில்,

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பனை, தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கம் தமது விற்பனை நிலையங்களினூடாக தமது உற்பத்திகளை விற்பனை செய்வதில் பல இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்து வருவதாகவும், இதனால் தமது அங்கத்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அன்றாட வாழ்வாதாரத்திற்கு இடர்படும்நிலையும் ஏற்பட்டுள்ளதாகவும் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களிடம் முறையிட்டுள்ளனர்.

இந் நிலையில் ஒட்டுசுட்டன் – கற்சிலைமடுப் பகுதியில் அமைந்துள்ள பனை,தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச்சங்கத்திற்கு நேரடியாகச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்கள், ஒட்டுசுட்டான் பனை,தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச்சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஆகியோரைச் சந்தித்து கலந்துரையாடி சிக்கல் நிலமைகள் குறித்துக் கேட்டறிந்துகொண்டார்.

அதனைத் தொடர்ந்து ஒட்டுசுட்டான் பனை,தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்க நிர்வாகிகளை, ஒட்டுசுட்டான் பிரதேசசெயலகத்திற்கு அழைத்துச்சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், ஒட்டுசுட்டான் பிரதேசசெயலருடனும் கலந்துரையாடி, ஒட்டுசுட்டான் பனை, தென்னை வள கூட்டுறவுச் சங்கத்தினர் எதிர்நோக்கியுள்ள தமது உற்பத்திகளை சந்தைப்படுத்துவதில் காணப்படும் பிரச்சினைக்குத் தீர்வுகாண நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

காசா நகரின் துஃபா (Tuffah district)இன் கனேடிய வீரர்கள் புதைக்கப்பட்டிருந்த பகுதி முற்றாகத் தகர்ப்பு.
அண்மைய செய்திகள்

காசா நகரின் துஃபா (Tuffah district)இன் கனேடிய வீரர்கள் புதைக்கப்பட்டிருந்த பகுதி முற்றாகத் தகர்ப்பு.

ஆனி 25, 2026
‘பில்டிங் கனடா சட்டத்தின்’ கீழ் ஆர்க்டிக் பெருங்கடல் பகுதியில் ஆழ்கடல் துறைமுகம் ஒன்றை நிர்மாணிக்க மத்திய அரசு திட்டம்
அண்மைய செய்திகள்

‘பில்டிங் கனடா சட்டத்தின்’ கீழ் ஆர்க்டிக் பெருங்கடல் பகுதியில் ஆழ்கடல் துறைமுகம் ஒன்றை நிர்மாணிக்க மத்திய அரசு திட்டம்

ஆனி 25, 2026
கியூபெக்கை தனி நாடாக்குவதற்கான ‘புளூ புக்'(Blue Book) திட்ட வழிகாட்டியை வெளியிட்ட பார்டி கியூபெகோயிஸ் கட்சி!
அண்மைய செய்திகள்

கியூபெக்கை தனி நாடாக்குவதற்கான ‘புளூ புக்'(Blue Book) திட்ட வழிகாட்டியை வெளியிட்ட பார்டி கியூபெகோயிஸ் கட்சி!

ஆனி 25, 2026
கியூபெக் மாகாண பொதுத்தேர்தலுக்கான உத்தியோகபூர்வ ஆங்கில மொழி நேரடி விவாதம் முற்றாக ரத்து!
அண்மைய செய்திகள்

கியூபெக் மாகாண பொதுத்தேர்தலுக்கான உத்தியோகபூர்வ ஆங்கில மொழி நேரடி விவாதம் முற்றாக ரத்து!

ஆனி 25, 2026
மொன்றியல் துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து விவாதிக்கப்படும்  ‘இன்செல்'(Incel) இணையக் கலாசாரம் மீதான ஆய்வுகள் தீவிரம்!
அண்மைய செய்திகள்

மொன்றியல் துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து விவாதிக்கப்படும் ‘இன்செல்'(Incel) இணையக் கலாசாரம் மீதான ஆய்வுகள் தீவிரம்!

ஆனி 25, 2026
மன்னாரில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய வடை தயாரிப்பு நிலையம் மூடல்
அண்மைய செய்திகள்

மன்னாரில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய வடை தயாரிப்பு நிலையம் மூடல்

ஆனி 23, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

சிறப்புச் செய்திகள்

கிளிநொச்சியில்  மீண்டும் கரும்பு செய்கை ஆரம்பம்

கிளிநொச்சியில் மீண்டும் கரும்பு செய்கை ஆரம்பம்

1 நாள் முன்னர்
வடக்கில் 9 ‘ஏ’ சித்தி பெற்ற 566 மாணவர்கள்

வடக்கில் 9 ‘ஏ’ சித்தி பெற்ற 566 மாணவர்கள்

4 நாட்கள் முன்னர்
வவுனியா மாநகரசபை அமர்வில் குழப்பநிலை – சபை அமர்வு ஒத்திவைப்பு

வவுனியா மாநகரசபை அமர்வில் குழப்பநிலை – சபை அமர்வு ஒத்திவைப்பு

2 நாட்கள் முன்னர்
யாழில் இடம்பெற்ற சர்வதேச யோக தின நிகழ்வுகள்

யாழில் இடம்பெற்ற சர்வதேச யோக தின நிகழ்வுகள்

4 நாட்கள் முன்னர்
பிரெஞ்சு மொழிச்சாசனத்தை மீறி, ஆங்கிலத்தில் விலைப்பட்டியல்களை வழங்கிய நிறுவனத்திற்கு அதிரடி அபராதம்.

பிரெஞ்சு மொழிச்சாசனத்தை மீறி, ஆங்கிலத்தில் விலைப்பட்டியல்களை வழங்கிய நிறுவனத்திற்கு அதிரடி அபராதம்.

5 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In