கனடாவின் பெரிய நகரங்களான டொரொன்டோ மற்றும் வான்கூவரில் அடுக்குமாடி குடியிருப்புகளின் சந்தை மிகவும் மந்தமாகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறைவான மக்களே அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளை வாங்குகிறார்கள் என்பதால், அவற்றின் விலைகளும் குறைவடைந்துள்ளன.
இந்த மந்தநிலை பெரும்பாலும் டொரொன்டோ மற்றும் தெற்கு ஒன்டாரியோவில் உள்ளது என்றும், வான்கூவரில் சற்று குறைவாக இருப்பதாகவும் மூத்த பொருளாதார நிபுணர் ராபர்ட் கவ்சிக் தெரிவித்துள்ளார்.
டொரொன்டோ பகுதியில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும்போது இந்த ஏப்ரலில் அடுக்குமாடி குடியிருப்புகளின் விற்பனை 30 சத வீதம் குறைந்துள்ளது.
இதேவேளை, வான்கூவரில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஏப்ரலில் அடுக்குமாடி குடியிருப்புகள் விற்பனை 20% குறைந்துள்ளது.
டொரொன்டோ பகுதியில் உள்ள மறுவிற்பனை அடுக்குமாடி குடியிருப்புகளின் விலைகள் இந்த ஆண்டு மேலும் 10% குறையக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.