EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு கியூபெக்
கியூபெக்கில் வாரயிறுதியில் இடம்பெற்ற தொடர் வீதி விபத்துக்களில் 8 பேர் உயிரிழப்பு

கியூபெக்கில் வாரயிறுதியில் இடம்பெற்ற தொடர் வீதி விபத்துக்களில் 8 பேர் உயிரிழப்பு

ஆடி 21, 2026
வகை: கியூபெக், முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

கியூபெக் மாகாணத்தில் வருடாந்தக் கட்டுமானத் துறை விடுமுறைக் காலம் (Construction Holiday) தொடங்கியுள்ள நிலையில், வாரயிறுதியில் இடம்பெற்ற தொடர் வீதி விபத்துக்களில் குறைந்தது 8 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மாகாண நெடுஞ்சாலைகளில் இடம்பெற்ற மூன்று வேறுபட்ட விபத்துக்களில் 6 பேரும், உள்ளூர் வீதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில் இருவருமாக மொத்தம் 8 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்.

கியூபெக்கின் லோரென்டியன்ஸில் (Laurentians) உள்ள லான்டியர் (Lantier) பகுதியில் இடம்பெற்ற இரு வாகனங்களின் நேருக்கு நேர் மோதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 30 வயதான தம்பதியும், அவர்களது 10 வயதுக்குட்பட்ட குழந்தையும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தொடர்ந்து, ததுசாக் (Tadoussac) பகுதிக்கு அருகே நார்த் ஷோர் (North Shore) நெடுஞ்சாலையில் இடம்பெற்ற மற்றொரு நேருக்கு நேர் மோதலில் 20 வயதுடைய இரு இளைஞர்கள் உயிரிழந்தனர். கியூபெக் நகருக்கு அருகே கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 60 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மொன்றியல் மற்றும் ஷெர்புரூக் (Sherbrooke) ஆகிய உள்ளூர் மாநகரப் பகுதிகளில் இடம்பெற்ற தனித்தனி விபத்துக்களில், வீதியைக் கடக்க முயன்ற 50 வயதுடைய பாதசாரி ஒருவரும், காரைக் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்த 68 வயதுடைய சாரதி ஒருவரும் உயிரிழந்தனர்.

இத்தொடர் விபத்துக்களைத் தொடர்ந்து, வீதிகளில் வாகனங்களைச் செலுத்தும் சாரதிகள் மிகுந்த பொறுமையுடனும் அவதானத்துடனும்
செயற்பட வேண்டும் என கியூபெக் மாகாணப் பொலிஸார் (SQ) தற்போது கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஜூலை மாதத்தின் கடைசி இரு வாரங்களில் கியூபெக்கில் சுமார் 20,0000 கட்டுமானத் தொழிலாளர்கள் ஒரே நேரத்தில் விடுமுறையில் செல்வது வழக்கமாகும்.

இவர்களுடன் பொதுமக்களும் பெருமளவில் பயணங்களை மேற்கொள்வதால், வீதிகளில் வாகன நெரிசல் அதிகரித்து, ஆண்டின் மிகவும் ஆபத்தான விபத்துக்காலம் இக்காலப்பகுதியில் உருவாகுவதாக, கியூபெக் மோட்டார் வாகனக் காப்புறுதிச் சபை (SAQ) சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த ஆண்டில் இந்த விடுமுறைக் காலத்தில் இடம்பெற்ற 30 விபத்துக்களில் 38 பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

சர்ச்சில் ஃபால்ஸ் நீர்மின் உற்பத்தி ஒப்பந்தம் தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட முதற்கட்டப் பேச்சுவார்த்தை
கியூபெக்

சர்ச்சில் ஃபால்ஸ் நீர்மின் உற்பத்தி ஒப்பந்தம் தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட முதற்கட்டப் பேச்சுவார்த்தை

ஆடி 21, 2026
மொன்றியல் பொலிஸாருக்கு எதிராக அவதூறுப் பரப்பிய 24 வயது இளைஞர் கைது
கியூபெக்

மொன்றியல் பொலிஸாருக்கு எதிராக அவதூறுப் பரப்பிய 24 வயது இளைஞர் கைது

ஆடி 21, 2026
கியூபெக் அரசு மற்றும் மத்திய அரசாங்கத்திற்கு இடையில் புதிய ஒப்பந்தம்
கியூபெக்

கியூபெக் அரசு மற்றும் மத்திய அரசாங்கத்திற்கு இடையில் புதிய ஒப்பந்தம்

ஆடி 21, 2026
கனடாவிலிருந்து  இறக்குமதியாகும்  பொருட்களுக்கு 50 சதவீத கூடுதல் வரி விதிக்க தீர்மானம் –  அமெரிக்க அதிபர்
கனடா

கனடாவிலிருந்து  இறக்குமதியாகும் பொருட்களுக்கு 50 சதவீத கூடுதல் வரி விதிக்க தீர்மானம் – அமெரிக்க அதிபர்

ஆடி 21, 2026
கியூபெக் – ஒகா பூங்கா ஏரியில் காணாமல்போன இளைஞரைத் தேடும் பணிகள் தீவிரம்
அண்மைய செய்திகள்

கியூபெக் – ஒகா பூங்கா ஏரியில் காணாமல்போன இளைஞரைத் தேடும் பணிகள் தீவிரம்

ஆடி 21, 2026
மாநகராட்சி தடையை மீறி கனேடிய தேசிய புகையிரத நிறுவனம் (CN) மொன்றியலில் களைகொல்லி தெளித்ததால் சர்ச்சை!
அண்மைய செய்திகள்

மாநகராட்சி தடையை மீறி கனேடிய தேசிய புகையிரத நிறுவனம் (CN) மொன்றியலில் களைகொல்லி தெளித்ததால் சர்ச்சை!

ஆடி 21, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

சிறப்புச் செய்திகள்

ரெபென்டிக்னி(Repentigny) ரயில் விபத்து: நகர்ப்புறங்களில் சரக்கு ரயில்களின் வேகத்தைக் குறைக்கக் கோரி நகர சபை அவசர தீர்மானம்!

ரெபென்டிக்னி(Repentigny) ரயில் விபத்து: நகர்ப்புறங்களில் சரக்கு ரயில்களின் வேகத்தைக் குறைக்கக் கோரி நகர சபை அவசர தீர்மானம்!

6 நாட்கள் முன்னர்
கூட்டாக இணைவதற்கு எனக்கு விருப்பமில்லை – டக்ளஸ் தேவானந்தா

கூட்டாக இணைவதற்கு எனக்கு விருப்பமில்லை – டக்ளஸ் தேவானந்தா

4 நாட்கள் முன்னர்
செம்மணி மனித புதைகுழியில் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ள 11 என்பு கூட்டு தொகுதிகள்

செம்மணி புதைகுழிக்குள் இருந்து விரல் என்புடன் மீட்கப்பட்ட மோதிரம்

4 நாட்கள் முன்னர்
வவுனியாவில் வீடமைப்புத் திட்டங்கள் மக்களிடம் கையளிப்பு

வவுனியாவில் வீடமைப்புத் திட்டங்கள் மக்களிடம் கையளிப்பு

4 நாட்கள் முன்னர்
வேவண்டன் தோட்ட மக்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம்

வேவண்டன் தோட்ட மக்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம்

4 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In