EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு கியூபெக்
இடைத்தேர்தல் தொடர்பில் அறிவித்துள்ள  பிரதமர் மார்க் கார்ட்னி

இடைத்தேர்தல் தொடர்பில் அறிவித்துள்ள பிரதமர் மார்க் கார்ட்னி

ஆடி 27, 2026
வகை: கியூபெக்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

கியூபெக் உள்ளிட்ட மூன்று மாகாணங்களில், பிரதிநிதிகள் இன்றி வெறுமையாக உள்ள மூன்று மத்திய நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி இடைத்தேர்தல் நடைபெறும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

 பிரதமர் மார்க் கார்ட்னி (Mark Carney) இந்தத் தகவலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் லிபரல் கட்சியின் பெரும்பான்மை பலம் கேள்விக்குறியாகியுள்ள நிலையில், இந்த இடைத்தேர்தல் முடிவுகள் மிகவும் தீர்க்கமானதாகப் பார்க்கப்படுகின்றன.

கியூபெக் மாகாணத்தின் ’ஷிகூட்டிமி—லே ஃபோர்ட் (Chicoutimi—Le Fjord)’ தொகுதி, ஒன்ராறியோ மாகாணத்தின் பீச்சஸ்—ஈஸ்ட் யார்க் (Beaches—East York) தொகுதி மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியாவின் நோர்த் வென்கூவர்—கப்பிலனோ (North Vancouver—Capilano) தொகுதி முதலான மூன்று தொகுதிகளுக்கே, இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

நாடாளுமன்றத்தில் லிபரல் கட்சி தனது கட்டுப்பாட்டைத் தொடர்வதற்கு, இந்த மூன்று தொகுதிகளில் குறைந்தபட்சம் ஒன்றிலாவது வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

சபாநாயகர் பிரான்சிஸ் ஸ்கார்பலெஜியா (Francis Scarpaleggia) தவிர்ந்து, தற்போதைய நிலவரப்படி லிபரல் கட்சி நாடாளுமன்றத்தில் 171 இடங்களைக்  கொண்டுள்ளது.

இருப்பினும், முன்னாள் அமைச்சர் ஸ்டீவன் கில்போல்ட் (Steven Guilbeault) ஓகஸ்ட் மாதம் 28 ஆம் திகதி தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதால், நாடாளுமன்றக் கோடைக்கால விடுமுறை முடிந்து உறுப்பினர்கள் செப்டம்பரில் மீண்டும் கூடும்போது லிபரல் கட்சியின் பலம் 170 ஆகக் குறையும் நிலை காணப்படுகின்றது.

எனவே, இந்த இடைத்தேர்தலில் ஒரு இடத்தையாவது கைப்பற்றினால் மட்டுமே லிபரல் கட்சி 171 இடங்களை எட்டி, சட்டமூலம் நிறைவேற்றுவதற்கான வாக்களிப்புகளில் சமநிலை ஏற்படும் சந்தர்ப்பங்களில் சபாநாயகரின் வாக்களிப்புடன் லிபரல் கட்சி அரசு தனது பெரும்பான்மையைத் தக்கவைத்துக் கொள்ள முடியும் என அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

செண்ட் லாரன்ஸ் ஆற்றிலிருந்து மீட்கப்பட்ட ஒனேகோ ஒட்ரா சரக்குக் கப்பல்
கியூபெக்

செண்ட் லாரன்ஸ் ஆற்றிலிருந்து மீட்கப்பட்ட ஒனேகோ ஒட்ரா சரக்குக் கப்பல்

ஆடி 28, 2026
மொன்றியல் நகரில் நிர்மாணிக்கப்படவுள்ள புதிய நவீன பாலம்
கியூபெக்

மொன்றியல் நகரில் நிர்மாணிக்கப்படவுள்ள புதிய நவீன பாலம்

ஆடி 28, 2026
சிறுமி மெலினா ஃபிராட்டோலினின் பெயரில்   நிறுவப்பட்டுள்ள புதிய வீதிப் பெயர்ப்பலகைகள்
கியூபெக்

சிறுமி மெலினா ஃபிராட்டோலினின் பெயரில் நிறுவப்பட்டுள்ள புதிய வீதிப் பெயர்ப்பலகைகள்

ஆடி 28, 2026
ஜெர்மனி தாக்குதலைத் தொடர்ந்து மொன்றியலின் ‘பிரைட்’ பேரணிக்கான பாதுகாப்பு அதிகரிப்பு.
அண்மைய செய்திகள்

ஜெர்மனி தாக்குதலைத் தொடர்ந்து மொன்றியலின் ‘பிரைட்’ பேரணிக்கான பாதுகாப்பு அதிகரிப்பு.

ஆடி 28, 2026
மொன்றியல் பாடசாலைகளில் ‘செரேனா கியூபெக்’ அமைப்பின் பாலியல் வழிகாட்டல் பொருட்களைப் பயன்படுத்தத் தடை
அண்மைய செய்திகள்

மொன்றியல் பாடசாலைகளில் ‘செரேனா கியூபெக்’ அமைப்பின் பாலியல் வழிகாட்டல் பொருட்களைப் பயன்படுத்தத் தடை

ஆடி 28, 2026
கியூபெக்  அரசாங்கத்தோடு தற்காலிக உடன்பாட்டை எட்டியுள்ள துணை மருத்துவ ஊழியர்கள்
கியூபெக்

கியூபெக்  அரசாங்கத்தோடு தற்காலிக உடன்பாட்டை எட்டியுள்ள துணை மருத்துவ ஊழியர்கள்

ஆடி 27, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

சிறப்புச் செய்திகள்

இலங்கையில் தீவிரமடையும் டெங்கு நோய்

இலங்கையில் தீவிரமடையும் டெங்கு நோய்

3 நாட்கள் முன்னர்
கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெற்ற விவசாய குழுக் கூட்டம்

கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெற்ற விவசாய குழுக் கூட்டம்

6 நாட்கள் முன்னர்
வடக்கிற்கு வருகை தரும் சைபீரியா நாட்டு பறவைகள்

வடக்கிற்கு வருகை தரும் சைபீரியா நாட்டு பறவைகள்

2 நாட்கள் முன்னர்
வவுனியா நெடுங்கேணியில் உயிரிழந்த  5 மாதக் குழந்தை

வவுனியா நெடுங்கேணியில் உயிரிழந்த 5 மாதக் குழந்தை

10 மணத்தியாலங்கள் முன்னர்
யாழில். தமிழ் கட்சிகளை சந்தித்த ஐரோப்பிய தூதுக்குழு

யாழில். தமிழ் கட்சிகளை சந்தித்த ஐரோப்பிய தூதுக்குழு

7 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In