சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) கைது பிடியாணை நிலுவையிலுள்ள இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அரச விமானம், கனடிய வான்பரப்பைப் பயன்படுத்துவதற்கு, அனுமதி கோரியிருந்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
இந்த விமானப் பயணம் தொடர்பில், கனடா அரசாங்கத்திடம் தான் உத்தியோகபூர்வ அனுமதி கோரியிருந்ததாக இஸ்ரேல் தற்போது அரசு அறிவித்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பைச் சந்திப்பதற்கும், மறைந்த குடியரசுக் கட்சி செனட்டர் லின்ட்சே கிரஹாமின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்கும் நெதன்யாகு, அமெரிக்கத் தலைநகர் வோஷிங்டன் நோக்கிப் பயணித்தபோதே இச்சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
இருப்பினும், கனேடிய வான்பரப்பில் நுழைய இஸ்ரேலிய பிரதமரின் விமானத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டதா அல்லது அவர் எவ்வாறு கனடிய வான்பரப்பில் நுழைந்து வெளியேறினார் என்பது குறித்து, எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கக் கனடிய அதிகாரிகள் மீண்டும் மறுத்துவிட்டதாக, ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இஸ்ரேலிய அரசிற்குச் சொந்தமான ‘விங் ஆஃப் சீயோன்’ (Wing of Zion) என்ற போயிங் 767 ரக விமானத்தில் பயணித்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, கனடாவின் ‘நியூஃபவுண்ட்லேண்ட்‘ மற்றும் ‘நோவா ஸ்கோஷியா’ ஆகிய மாகாணங்களின் வான்பரப்பைக் கடந்தே அமெரிக்காவிற்குச் சென்றுள்ளார்.
காசாவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்காகப் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு எதிராகச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் 2024 ஆம் ஆண்டு நவம்பர் 21 ஆம் திகதி அன்று கைது பிடியாணை பிறப்பித்திருந்தது.
கனடா, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் உரோம் சாசனத்தில் (Rome Statute) கையெழுத்திட்டுள்ள ஒரு நாடு என்ற வகையில், நெதன்யாகு கனடாவிற்கு வருகை தந்தால் அவர் கைது செய்யப்படுவார் என்று தற்போதைய தற்போதைய பிரதமர் மார்க் காரினியும் (Mark Carney), முன்னைய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் பகிரங்கமாக அறிவித்திருந்தனர்.
இந்த நிலையில், தற்போது இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் விமானத்திற்கு, கனேடிய வான்பரப்பைப் பயன்படுத்த மறைமுக அனுமதி வழங்கப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
நெதன்யாகுவின் விமானம் கடந்த டிசம்பர் மாதம் 29 ஆம் திகதி அன்று புளோரிடாவுக்கும், கடந்த பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி அன்று அமெரிக்காவின் மற்றொரு மாநிலத்திற்கும் பயணித்தபோது கனடிய வான்பரப்பைப் பயன்படுத்தியிருந்தமை குறிப்பிடத் தக்கது.











