கியூபெக் மாகாணத் தேர்தலுக்கான இறுதி விவாத மேடையில், தனியான கியூபெக் சுயாட்சி குறித்த வாக்கெடுப்பு (Referendum) பெரும் சர்ச்சையையும் சூடான விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
“கியூபெக் மக்கள் சுயாட்சி வாக்கெடுப்பைக் கண்டு அஞ்சக் கூடாது” எனப் பார்ட்டி கியூபெக்வா (Parti Québécois – PQ) கட்சியின் தலைவர் போல் செயிண்ட்-பியர் பிளமோண்டன் (Paul St-Pierre Plamondon) தெரிவித்துள்ளார்.
தாம் ஆட்சிக்கு வந்தால் அடுத்த நான்கு ஆண்டுகளில் தனி கியூபெக் தொடர்பான வாக்கெடுப்பை நடத்தவுள்ளதாகவும் அது வாக்காளர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
”எமது எதிர்காலத்தையும் ஜனநாயகத்தையும் தீர்மானிக்க வாக்கெடுப்புக்குச் செல்வதைக் கண்டு எவரும் அஞ்சத் தேவையில்லை” என முன்னாள் கியூபெக் முதல்வர் ஜாக் பரிஸோவின் கூற்றையும் செயிண்ட்-பியர் பிளமோண்டன் சுட்டிக்காட்டியுள்ளார்.











