கொழும்பு, தலங்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கலல்கொட சந்திப்புப் பகுதியில், ஒரு கிலோகிராம் 10 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 26 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த சனிக்கிழமை (24) இரவு இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், நுவகொட பிரதேச குற்றப் புலனாய்வுப் பணியகத்தைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரிகள், சந்தேகத்திற்கிடமான காரொன்றை நிறுத்தி சோதனையிட்டுள்ளனர்.
இதன்போது, குறித்த காரில் இருந்து ஒரு கிலோகிராம் 10 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதுடன், காரில் பயணித்த சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிலியந்தலைப் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய சந்தேக நபர், மேலதிக விசாரணைகளுக்காக தலங்கம பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலங்கம பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.











