வலிகாமம் வடக்கு பிரதேச சபை மற்றும் ‘விதையனைத்தும் விருட்சமே’ அமைப்பு ஆகியன இணைந்து முன்னெடுத்த பிளாஸ்டிக் ஒழிப்புச் செயற்றிட்டம் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கீரிமலை பகுதியில் நடைபெற்றது.
இச்செயற்றிட்டத்தின் போது, கீரிமலை நகுலேஸ்வர மகா வித்தியாலய முன்றலில் இருந்து கீரிமலை ஆலயத்தைச் சுற்றியுள்ள புனிதப் பிரதேசப் பகுதிகளில் வீசப்பட்டிருந்த பிளாஸ்டிக் போத்தல்கள், பைகள் மற்றும் கழிவுப் பொருட்கள் என்பன முற்றாக அகற்றப்பட்டு அப்பகுதி சுத்தப்படுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் “விதையனைத்தும் விருட்சமே” அமைப்பின் உறுப்பினர்கள், வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளர், உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்கள், கீரிமலை நகுலேஸ்வர மகா வித்தியாலயத்தினர், இலங்கை செஞ்சிலுவைச் சங்கம், கீரிமலை நகுலேஸ்வர சனசமூக நிலையத்தினர் மற்றும் கிராம மக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.











