கியூபெக்கில் நடைபெறும் மாநாட்டில் கியூபெக் முதல்வரை உரையாற்ற அனுமதி மறுக்கப்படுவது ஒட்டுமொத்த கியூபெக் மக்களையும் அவமதிப்பதாக உள்ளதாக, பிளாக் கியூபெக்கே (Bloc Québécois) கட்சித் தலைவர் ஐவ்ஸ்-பிரான்சுவா பிளான்செட் (Yves-François Blanchet) தெரிவித்துள்ளார்.
மொண்ட்ரியலில் நடைபெறவுள்ள கனடா-ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாட்டில் (Canada-EU summit) கியூபெக் மாகாண முதல்வர் போல் செயின்ட்-பியர் பிளமொண்டனுக்குப் (Paul St-Pierre Plamondon) பேச அனுமதி மறுக்கப்பட்டுள்ளமை குறித்தே, ஐவ்ஸ்-பிரான்சுவா பிளான்செட் (Yves-François Blanchet) இக்கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
மத்திய அரசு உடனடியாக கியூபெக் முதல்வரைத் தொடர்பு கொண்டு மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
‘கியூபெக் சாலிடைர்’ (Québec Solidaire) மற்றும் கியூபெக் கன்சர்வேடிவ் கட்சித் தலைவர்களும் மத்திய அரசின் இந்த நிலைப்பாட்டிற்குக் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அதேவேளையில், கியூபெக் லிபரல் கட்சியின் தலைவர் சார்லஸ் மில்லியார்ட் (Charles Milliard), இந்தப் பிரச்சினைக்காக கனடா-ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாட்டைப் புறக்கணிப்பது சரியான முடிவல்ல என்றும், இது ஒட்டாவாவுடனான எதிர்கால உறவுகளுக்கு உகந்ததல்ல என்றும் கருத்துத் தெரிவித்துள்ளார்.











