இந்திய நாட்டை கட்டமைப்பதில் இளைஞர்கள் தீவிரமாக பங்கேற்க வேண்டும் என்று ஸோஹோ (Zoho) நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த 25ஆம் திகதி பல்வேறு பகுதிகளில் ஆர்எஸ்எஸ் (RSS) பேரணி நடைபெற்றது.
இதன் தொடர்ச்சியாக, இரண்டாம் கட்டமாக திருச்சி, மதுரை, தென்காசி, கோவை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நவம்பர் 1ஆம் திகதி ஆர்எஸ்எஸ் பேரணிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த பேரணிகளில் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
அந்த வகையில் சங்கரன்கோவிலில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் பேரணியில், ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு நேரடியாகக் கலந்து கொண்டார்.
அவர் இந்த பேரணியின் ஆரம்பம் முதல் இறுதி வரை முழுமையாகப் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.











