அம்பாறை மாவட்டத்தின் மலவத்தை விபுலானந்தா பாடசாலைக்கு அருகில் இன்றையதினம் ஏற்பட்ட விபத்தில் 23 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிள் மற்றும் லொறி ஆகியன மோதியதில் இவ்விபத்து சம்பவித்துள்ளது.
இவ்விபத்தில் ஒரு இளைஞர் உயிரிழந்துள்ளதோடு, மற்றுமொரு இளைஞர் காயமடைந்த நிலையில் அம்பாறை பொது மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் விபத்து தொடர்பில் லொறி சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்க் கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.











