EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு விளையாட்டு
ஐபிஎல் 2027 ஏலத்தில் இடம்பெற்றுள்ள 12 பங்களாதேஷ் வீரர்கள்!

ஐபிஎல் 2027 ஏலத்தில் இடம்பெற்றுள்ள 12 பங்களாதேஷ் வீரர்கள்!

கார்த்திகை 25, 2026
வகை: விளையாட்டு
A A
Share on FacebookShare on Twitter

ஐபிஎல் 2027 தொடருக்கான வீரர்கள் ஏலத்தின் ஆரம்பப் பட்டியல் வெளியாகியுள்ள நிலையில், பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களான ஷகிப் அல் ஹசன் மற்றும் முஸ்தபிசுர் ரஹ்மான் ஆகியோரின் பெயர்கள் அதில் இடம்பெறவில்லை.

நவம்பர் 24ஆம் திகதி அணிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள ஆரம்பப் பட்டியலில், பங்களாதேஷைச் சேர்ந்த 12 வீரர்கள் இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இவர்களில் தஸ்கின் அஹமட், தஸ்கின் உள்ளிட்ட வீரர்களுடன் ஹசன் மஹ்மூத், ரிஷாத் ஹொசைன், ஷரிபுல் இஸ்லாம், தவ்ஹீத் ஹிரிடோய் உள்ளிட்ட வீரர்களும் இடம்பெற்றுள்ளனர்.

குறிப்பாக, கடந்த ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியினால் 9.20 கோடி இந்திய ரூபாய்க்கு வாங்கப்பட்ட முஸ்தபிசுர் ரஹ்மான், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து அணியிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்தார். இந்தச் சம்பவம் இந்தியா – பங்களாதேஷ் கிரிக்கெட் உறவுகளிலும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், 2027ஆம் ஆண்டு ஏலத்திற்கான ஆரம்பப் பட்டியலிலும் அவர் இடம்பெறவில்லை. முன்னாள் பங்களாதேஷ் அணித்தலைவர் ஷகிப் அல் ஹசனும் பட்டியலில் இல்லை. எனினும், இவர்கள் இருவரும் இடம்பெறாததற்கான உத்தியோகபூர்வ காரணம் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

இதற்கிடையில், இங்கிலாந்தின் முன்னாள் அணித்தலைவர் பென் ஸ்டோக்ஸ் இரண்டு கோடி இந்திய ரூபாய் அடிப்படை விலையில் ஏலத்திற்குப் பதிவு செய்துள்ளார்.

மொத்தமாக 17 நாடுகளைச் சேர்ந்த 1,220 வீரர்கள் ஆரம்பப் பட்டியலில் இடம்பெற்றுள்ளதுடன், இவர்களில் 939 பேர் இந்திய வீரர்கள் என்றும் 281 பேர் வெளிநாட்டு வீரர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பத்து அணிகளுக்கும் சேர்த்து அதிகபட்சமாக 66 வீரர்களைத் தெரிவுசெய்ய முடியும். இதில் 25 இடங்கள் வெளிநாட்டு வீரர்களுக்கானவை.

அணிகள் நவம்பர் 27ஆம் திகதிக்குள் கூடுதல் வீரர்களின் பெயர்களைப் பரிந்துரைக்கவும், டிசம்பர் முதலாம் திகதிக்குள் தங்களுக்குத் தேவையான வீரர்களின் பட்டியலைச் சமர்ப்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

ஐபிஎல் 2027 வீரர்களின் ஏலம் எதிர்வரும் டிசம்பர் 16ஆம் திகதி கோவாவில் நடைபெறவுள்ள நிலையில், பங்களாதேஷ் வீரர்களின் பங்கேற்பு மற்றும் ஷகிப், முஸ்தபிசுர் ஆகியோரின் இல்லாமை கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ஹாமில்டன் ஹவோக் அணியுடன் இணைந்துள்ள இரு வீராங்கனைகள்!
விளையாட்டு

ஹாமில்டன் ஹவோக் அணியுடன் இணைந்துள்ள இரு வீராங்கனைகள்!

கார்த்திகை 22, 2026
கனடியன் பிரீமியர் லீக் கால்பந்து இறுதிப்போட்டி – மீண்டும் மோதும் கால்கரி, ஒட்டாவா!
விளையாட்டு

கனடியன் பிரீமியர் லீக் கால்பந்து இறுதிப்போட்டி – மீண்டும் மோதும் கால்கரி, ஒட்டாவா!

கார்த்திகை 21, 2026
மொன்றியல் மகளிர் ஹொக்கி அணிக்கு புதிய சவால் – 12 அணிகளாக விரிவடையும் PWHL!
விளையாட்டு

மொன்றியல் மகளிர் ஹொக்கி அணிக்கு புதிய சவால் – 12 அணிகளாக விரிவடையும் PWHL!

கார்த்திகை 21, 2026
ஐ.பி.எல். போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்தார் எம்.எஸ். தோனி!
விளையாட்டு

ஐ.பி.எல். போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்தார் எம்.எஸ். தோனி!

கார்த்திகை 17, 2026
ஐபிஎல் போட்டிகளிலிருந்து இலங்கை வீரர்கள் ஆறு பேர் விடுவிப்பு!
விளையாட்டு

ஐபிஎல் போட்டிகளிலிருந்து இலங்கை வீரர்கள் ஆறு பேர் விடுவிப்பு!

கார்த்திகை 17, 2026
மொன்றியல் கனடியன்ஸ் அணிக்கு சர்ச்சைக்குரிய தோல்வி!
விளையாட்டு

மொன்றியல் கனடியன்ஸ் அணிக்கு சர்ச்சைக்குரிய தோல்வி!

கார்த்திகை 11, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

சிறப்புச் செய்திகள்

17 மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற மின்னல் எச்சரிக்கை விடுப்பு!

17 மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற மின்னல் எச்சரிக்கை விடுப்பு!

1 மணத்தியாலம் முன்னர்
யாழில் ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த இருவர் கைது!

மட்டக்களப்பில் காதலனுக்காகத் தாயின் தாலிக்கொடியைத் திருடிய மகள் கைது!

2 நாட்கள் முன்னர்
செம்மணிப் புதைகுழி விவகாரம் – கார்பன் பரிசோதனை தொடர்பில் நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

செம்மணிப் புதைகுழி விவகாரம் – கார்பன் பரிசோதனை தொடர்பில் நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

4 நாட்கள் முன்னர்
நெல்லியடியில் ஆரம்பமான மாவீரர் வார நிகழ்வுகள்!

நெல்லியடியில் ஆரம்பமான மாவீரர் வார நிகழ்வுகள்!

4 நாட்கள் முன்னர்
யாழிலிருந்து விடைபெற்றுச் செல்லும் இந்தியத் துணைத்தூதர் சாய் முரளி!

யாழிலிருந்து விடைபெற்றுச் செல்லும் இந்தியத் துணைத்தூதர் சாய் முரளி!

1 நாள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check