மாத்தறை பிரவுன்ஸ் ஹில் பகுதியில் உள்ள சொத்து தொடர்பான விசாரணையில், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவைக் கைது செய்ய மாத்தறை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு சமர்ப்பித்த அறிக்கையைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஒன்றரை ஏக்கர் காணி, 60 மில்லியன் ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், அதன் கொள்வனவு தொடர்பான நிதி நடவடிக்கைகள் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மேலும், நீதிமன்றத்தில் பலமுறை ஆஜராகத் தவறியதைத் தொடர்ந்து, பசில் ராஜபக்ஷவின் பிணைத்தொகையைப் பறிமுதல் செய்யவும் முன்னதாக உத்தரவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.











