படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியத்தினரிடம் யாழ். ஊடகவியலாளர்கள் கோரியுள்ளனர்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் மற்றும் பிரான்ஸ், இத்தாலி, ஜேர்மன், நெதர்லாந்து ஆகிய நாடுகளின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகராலய தூதுவர்கள் கடந்த யூலை மாதம் 22ஆம் திகதி
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட நிலையில் யாழை சேர்ந்த ஊடகவியலாளர்களை சந்தித்து கலந்துரையாடினார்கள்.
அதன்போது, செம்மணி மனித புதைகுழியில் முன்னெடுக்கப்படும் அகழ்வாய்வு பணிகள் தொடர்பிலும், செய்தி அறிக்கையிடலில் உள்ள சவால்கள் தொடர்பிலும், காணி விடுவிப்புக்கள் தொடர்பிலும் தற்போதைய அரசியல் நிலவரங்கள் தொடர்பிலும் விரிவான கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.











