நாட்டில் பல்வேறு விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில், முன்னாள் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைக்காக இலஞ்ச விசாரணை ஆணைக்குழுவிற்கு (CIABOC) வருகை தந்திருந்தபோதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பின்னர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், அவரை எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.











