நாட்டில் சீரற்ற வானிலையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் வயிற்றுப்போக்கு மற்றும் எலிக் காய்ச்சல் போன்ற தொற்று நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனே அருகில் உள்ள வைத்தியரை நாடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் டெங்கு நோயின் தாக்கம் இன்னும் அதிகரிக்க கூடும் என்பதால் பொதுமக்கள் அனைவரையும் அவதானத்துடன் செயட்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.











