EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
ஷேக் ஹசீனா நேர்காணலைத் தொடர்ந்து கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

ஷேக் ஹசீனா நேர்காணலைத் தொடர்ந்து கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

ஆவணி 6, 2026
வகை: அண்மைய செய்திகள், உலகம்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

வங்கதேச நாட்டின் முன்னாள் பிரதமரும் அவாமி லீக் தலைவருமான ஷேக் ஹசீனா, டெல்லியில் உள்ள வெளிநாட்டு செய்தியாளர் மன்றம் வாயிலாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த காணொளி கருத்தரங்கில் பங்கேற்றுப் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் கிரிக்கெட் அணி கேப்டனும், அவாமி லீக் முன்னாள் எம்பியுமான சாகிப் அல் ஹசனும் கலந்து கொண்டார். செய்தியாளர் சந்திப்பு முடிந்த சில மணி நேரங்களிலேயே, மகுரா நகரின் கேஷப்மோர் பகுதியில் அமைந்துள்ள ஷகிப் அல் ஹசனின் மூதாதையர் இல்லத்தின் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

உள்ளூர் நேரப்படி இரவு 8:45 மணியளவில் நடந்த இந்த தாக்குதலில் ஷகிப் அல் ஹசனின் இல்லம் பலத்த சேதமடைந்தது. இச்சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அவாமி லீக் கட்சி, “பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டதற்காகவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வங்கதேசத்தை பாசிசம் சூழ்ந்துள்ளது என்பதற்கு இதுவே சான்று” என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. மேலும், பிஎன்பி, இஸ்லாமிய ஜமாத் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஊடகங்களை அச்சுறுத்தி வருவதாகவும், ஜனநாயக கட்டமைப்பு என்ற பெயரில் அவாமி லீக் ஆதரவாளர்கள் மீது திட்டமிடப்பட்ட தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதாகவும் குற்றம்சாட்டியுள்ளது.

முன்னதாக காணொளி வாயிலாக உரையாற்றிய ஷேக் ஹசீனா, சிறை தண்டனை அல்லது உயிரிழப்பு போன்ற எந்தவொரு ஆபத்துக்கள் வந்தாலும், நாட்டின் ஜனநாயகத்தை மீட்டெடுக்கவும் மக்களுக்காக உழைக்கவும் வரும் டிசம்பர் மாதம் மீண்டும் வங்கதேசத்திற்குத் திரும்பப் போவதாக உறுதியளித்தார். இத்தகைய சூழலில், ஷகிப் அல் ஹசனின் இல்லத்தின் மீது நடத்தப்பட்டுள்ள இந்த வெடிகுண்டு தாக்குதல் சம்பவம் அந்நாட்டில் மீண்டும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ஒரு அங்குல நிலத்தையும் விடுவிக்க மாட்டோம்” – பாதுகாப்பு அமைச்சு மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு
அண்மைய செய்திகள்

ஒரு அங்குல நிலத்தையும் விடுவிக்க மாட்டோம்” – பாதுகாப்பு அமைச்சு மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு

ஆவணி 7, 2026
Colomboபொரளை மகசின் சிறைச்சாலையில் பரபரப்பு
அண்மைய செய்திகள்

Colomboபொரளை மகசின் சிறைச்சாலையில் பரபரப்பு

ஆவணி 7, 2026
திருவள்ளூர் ஆலை அமோனியா கசிவு: உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ₹10 லட்சம் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு
உலகம்

திருவள்ளூர் ஆலை அமோனியா கசிவு: உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ₹10 லட்சம் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு

ஆவணி 6, 2026
வங்கதேசத்தின் அதிபர் தேர்தல் : வங்கதேச தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
அண்மைய செய்திகள்

வங்கதேசத்தின் அதிபர் தேர்தல் : வங்கதேச தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஆவணி 6, 2026
நேட்டோ உளவு விவகாரம்: தீவிர விசாரணையில் கனடிய அதிகாரிகள் – பிரதமர் மார்க் கார்னி!
அண்மைய செய்திகள்

நேட்டோ உளவு விவகாரம்: தீவிர விசாரணையில் கனடிய அதிகாரிகள் – பிரதமர் மார்க் கார்னி!

ஆவணி 6, 2026
ஹிரோஷிமா அணுகுண்டு தாக்குதலின் 81-வது ஆண்டு நினைவு இன்று!
உலகம்

ஹிரோஷிமா அணுகுண்டு தாக்குதலின் 81-வது ஆண்டு நினைவு இன்று!

ஆவணி 6, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

சிறப்புச் செய்திகள்

வடக்கில் நான்கு மாதங்களில் 7606 நாய்களுக்கு கருத்தடை செய்ய இலக்கு

வடக்கில் நான்கு மாதங்களில் 7606 நாய்களுக்கு கருத்தடை செய்ய இலக்கு

4 நாட்கள் முன்னர்
நாவலப்பிட்டி – கினிகத்தேன வீதியில் போக்குவரத்து பாதிப்பு

நாவலப்பிட்டி – கினிகத்தேன வீதியில் போக்குவரத்து பாதிப்பு

3 நாட்கள் முன்னர்
யாழ்ப்பாணம் – கிளிநொச்சி ஊடகவியலாளர்களோடு கலந்துரையாடிய வெகுசன ஊடக பிரதி அமைச்சர்!

யாழ்ப்பாணம் – கிளிநொச்சி ஊடகவியலாளர்களோடு கலந்துரையாடிய வெகுசன ஊடக பிரதி அமைச்சர்!

6 நாட்கள் முன்னர்
மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற  விசேட கலந்துரையாடல்

மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடல்

6 நாட்கள் முன்னர்
ஸ்பெயின் அருகே நடுக்கடலில் பழுதான படகு: 15 நாட்கள் உணவு, தண்ணீரின்றி அகதிகள் பலி

ஸ்பெயின் அருகே நடுக்கடலில் பழுதான படகு: 15 நாட்கள் உணவு, தண்ணீரின்றி அகதிகள் பலி

1 நாள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In