EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்கான தடையை நீக்க வேண்டும்: ஈரோஸ் கட்சி வலியுறுத்தல்!

புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்கான தடையை நீக்க வேண்டும்: ஈரோஸ் கட்சி வலியுறுத்தல்!

ஐப்பசி 18, 2026
வகை: இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

1987ஆம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின்படி, ஆயுதம் ஏந்திய அனைத்துத் தமிழ் இயக்கங்களுக்கும் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டதாக ஈரோஸ் கட்சியின் தலைவர் இராஜநாதன் பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

இந்த ஒப்பந்தத்தின் சரத்துகள் இன்னும் காலாவதியாகாத நிலையில், புலம்பெயர் தேசங்களில் தடை செய்யப்பட்டுள்ள சில தமிழ் மக்கள் மற்றும் தமிழ் அமைப்புகளுக்குப் பொதுமன்னிப்பு வழங்கித் தடையை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

மட்டக்களப்பு வொய்ஸ் ஒப் மீடியாவில் சனிக்கிழமை(17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

தமிழ் மக்களின் தொடர்ச்சியான போராட்டங்கள் மற்றும் உயிர், சொத்து தியாகங்களுக்குப் பின்னரே 9 மாகாணங்களுக்குமான மாகாண சபை ஆட்சி முறைமை கொண்டுவரப்பட்டது எனச் சுட்டிக்காட்டிய அவர், இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் முதன்மை அம்சமாக அனைத்துத் தமிழ் இயக்கங்களுக்கும் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டதாகக் குறிப்பிட்டார்.

இருப்பினும், தற்போதும் புலம்பெயர் நாடுகளில் உள்ள சில தமிழ் மக்களும் அமைப்புகளும் தடை செய்யப்பட்டுள்ளதால், போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்கு வரக்கூடிய கணிசமான பொருளாதார முதலீடுகள் தடைப்பட்டு வருகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.

புலம்பெயர் தமிழ் மக்கள் பல கோடி ரூபாய் பெறுமதியான முதலீடுகளை வைத்துள்ள நிலையில், அந்த நிதி இலங்கைக்கு வரும்பட்சத்தில் நாடும் வடகிழக்கு கிராமங்களும் அபிவிருத்தியடையும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே, இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை மீளாய்வு செய்து, அதன் சரத்துகளின்படி புலம்பெயர் தமிழ் மக்கள் மற்றும் அமைப்புகளுக்கான தடையை நீக்க இந்திய அரசும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தற்போதைய அரசும் கவனத்தில் கொள்ள வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், இந்த ஒப்பந்தம் காலாவதியாகாததால் இந்தியா இதில் பாராமுகமாக இருக்க முடியாது என்றும், தற்போதைய அரசால் இதனை நடைமுறைப்படுத்த முடியும் என்றும் தெரிவித்த அவர், இது தொடர்பாக இலங்கை, இந்திய அரசுகளுக்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கும் மகஜர் கையளிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

வசாவிளான் மக்களின் காணி மீட்புப் போராட்டம் ஆறாவது வாரமாகத் தொடர்கிறது!
அண்மைய செய்திகள்

வசாவிளான் மக்களின் காணி மீட்புப் போராட்டம் ஆறாவது வாரமாகத் தொடர்கிறது!

ஐப்பசி 18, 2026
யாழில் வெள்ளப் பாதிப்புகளைக் குறைக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பு – அமைச்சர் சந்திரசேகர்
அண்மைய செய்திகள்

யாழில் வெள்ளப் பாதிப்புகளைக் குறைக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பு – அமைச்சர் சந்திரசேகர்

ஐப்பசி 18, 2026
ஐந்து நாய்களை வளர்த்த  உரிமையாளருக்கு எதிராக வழக்கு தாக்கல்
அண்மைய செய்திகள்

ஐந்து நாய்களை வளர்த்த உரிமையாளருக்கு எதிராக வழக்கு தாக்கல்

ஐப்பசி 18, 2026
காங்கேசன்துறையில் பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் தூய்மையாக்கல் செயற்றிட்டம் முன்னெடுப்பு
அண்மைய செய்திகள்

காங்கேசன்துறையில் பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் தூய்மையாக்கல் செயற்றிட்டம் முன்னெடுப்பு

ஐப்பசி 18, 2026
சிகிச்சைக்காக நவலோக வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட ஷிரந்தி ராஜபக்ஷ
அண்மைய செய்திகள்

சிகிச்சைக்காக நவலோக வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட ஷிரந்தி ராஜபக்ஷ

ஐப்பசி 18, 2026
சில மாவட்டங்களுக்கு மின்னல் எச்சரிக்கை விடுப்பு
அண்மைய செய்திகள்

சில மாவட்டங்களுக்கு மின்னல் எச்சரிக்கை விடுப்பு

ஐப்பசி 18, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

சிறப்புச் செய்திகள்

பாம்பன் மீனவர் வலையில் சிக்கிய 350 கிலோ எடை கொண்ட மீன்

பாம்பன் மீனவர் வலையில் சிக்கிய 350 கிலோ எடை கொண்ட மீன்

5 நாட்கள் முன்னர்
ருமேனியா கடற்பரப்பில் எண்ணெய் கப்பலில் தீ விபத்து

ருமேனியா கடற்பரப்பில் எண்ணெய் கப்பலில் தீ விபத்து

3 நாட்கள் முன்னர்
கொக்குவில் பிரம்படி படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

கொக்குவில் பிரம்படி படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

7 நாட்கள் முன்னர்
சட்டவிரோதமாக தங்கம் கொண்டு வந்த  குற்றச்சாட்டில் மூன்று இந்தியர்கள் கைது

சட்டவிரோதமாக தங்கம் கொண்டு வந்த குற்றச்சாட்டில் மூன்று இந்தியர்கள் கைது

1 நாள் முன்னர்
மட்டக்களப்பில் சட்டவிரோத சுருக்கு வலை விவகாரம் – அதிகாரிகள் மீது இலஞ்சக் குற்றச்சாட்டு

மட்டக்களப்பில் சட்டவிரோத சுருக்கு வலை விவகாரம் – அதிகாரிகள் மீது இலஞ்சக் குற்றச்சாட்டு

4 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check