வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் வீதிகளில் கட்டுப்பாடின்றி மாடுகள் நடமாடுவதால், பொதுமக்களின் போக்குவரத்து, வாகனப் பயணம் மற்றும் வீதிப் பாதுகாப்பு பாதிக்கப்படுவதோடு விபத்துக்கள் ஏற்படும் அபாயமும் காணப்படுகின்றது.
இதனைக் கருத்திற் கொண்டு, வீதிகளில் நடமாடும் மாடுகளைப் பிடித்து உரிய நடைமுறைகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில், மாட்டின் உரிமையாளர்கள் தங்களுக்குச் சொந்தமான மாடுகளை வீதிகளில் கட்டுப்பாடின்றி நடமாட விடாமல், உரிய முறையில் பராமரித்து வைத்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பிடிக்கப்படும் ஒரு மாட்டிற்கு தண்டப்பணமாக 2,700.00 ரூபாயும், பிடித்தல் மற்றும் தொடர்புடைய செலவுகளுக்காக 2,000.00 ரூபாயும், பராமரிப்புக் கட்டணமாக நாள் ஒன்றிற்கு 300.00 ரூபாயும் அறவிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கூறப்பட்ட கட்டணங்கள் மற்றும் நடவடிக்கைகள் நடைமுறையிலுள்ள சட்டங்கள், சபையின் அங்கீகரிக்கப்பட்ட தீர்மானங்கள் மற்றும் உரிய விதிமுறைகளுக்கு அமைவாகவே நடைமுறைப்படுத்தப்படும்.
எனவே, மாட்டு உரிமையாளர்கள் இவ்வறிவித்தலைக் கவனத்தில் கொண்டு, தங்களது மாடுகளை வீதிகளில் கட்டுப்பாடின்றி நடமாட விடுவதைத் தவிர்த்து, பொதுமக்களின் பாதுகாப்பையும் சமூக நலனையும் உறுதிப்படுத்த முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு பிரதேச சபையின் தவிசாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.











