EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு உலகம்
நியூ ஆர்லியன்ஸில் மிசிசிப்பி நதியில் கப்பல் விபத்து!

நியூ ஆர்லியன்ஸில் மிசிசிப்பி நதியில் கப்பல் விபத்து!

கார்த்திகை 15, 2026
வகை: உலகம்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் (New Orleans) நகரில் மிசிசிப்பி நதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசுப் பயணிகள் கப்பல் மீது வெள்ளிக்கிழமை (13.11.2026) எண்ணெய்க் கப்பல் ஒன்று மோதியதில், பயணிகள் கப்பல் கவிழ்ந்து மூழ்கியுள்ளது.

இந்த விபத்தின் போது பயணிகள் கப்பலிலிருந்து வெளியேற முற்பட்ட நிலையில் பலர் ஆற்றில் வீசப்பட்டனர்.

எனினும், துறைமுகப் பணியாளர்கள், தீயணைப்புப் படையினர் மற்றும் அங்கிருந்த பொதுமக்கள் விரைந்து செயற்பட்டு நீரில் விழுந்தவர்களைப் பாதுகாப்பாக மீட்டதால், கப்பலில் இருந்த அனைவரும் உயிர் தப்பியுள்ளதாக நியூ ஆர்லியன்ஸ் நகர முதல்வர் ஹெலினா மொரேனோ (Helena Moreno) செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

இதனை “மிசிசிப்பியில் நிகழ்ந்த ஒரு அற்புதம்” என வர்ணித்த அவர், அமெரிக்கன் குரூஸ் லைன்ஸ் (American Cruise Lines) நிறுவனத்திற்குச் சொந்தமான ‘அமெரிக்கன் ஹெரிடேஜ்’ (American Heritage) கப்பலில் பயணித்த 32 பயணிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், எவருக்கும் உயிருக்கு ஆபத்தான காயங்கள் ஏற்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

விபத்து நடந்த நேரத்தில் 150 பயணிகளை ஏற்றிச் செல்லும் திறன் கொண்ட அந்தக் கப்பலில் சுமார் 180 முதல் 190 பயணிகள் மற்றும் பணியாளர்கள் இருந்ததாக நகர முதல்வர் தெரிவித்தார்.

நண்பகல் வேளையில் ‘அட்லாண்டிக் அஸ்பால்ட்’ (Atlantic Asphalt) என்ற எண்ணெய்க் கப்பல் கட்டுப்பாட்டை இழந்து, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பயணிகள் கப்பல் மீது மோதியதாக அவர் கூறினார்.

கப்பல் மூழ்கத் தொடங்கியதும் பயணிகள் தப்பிக்க முற்பட்டதாகவும், இறுதியில் கப்பல் கவிழ்ந்து மக்கள் ஆற்றில் விழுந்ததாகவும் அவர் விவரித்தார்.

கப்பல் கவிழ்வதற்கு முன்னதாக சுமார் 87 பயணிகள் கப்பலிலிருந்து இறங்கிவிட்டதாகத் துறைமுகப் பொலிஸ் தலைவர் மெலனி மொன்ட்ரோல் (Melanie Montroll) தெரிவித்துள்ளார்.

உள்ளூர், மாநில மற்றும் மத்திய அதிகாரிகள் மற்றும் ஏனைய கப்பல்களில் இருந்தவர்களின் விரைவான நடவடிக்கையால் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டதாக நகர முதல்வர் பாராட்டியுள்ளார்.

விபத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் அனைத்து ஆற்றுப் போக்குவரத்துகளும் மூடப்பட்டுள்ளதாக அமெரிக்கக் கடலோரக் காவல்படை (US Coast Guard) தெரிவித்துள்ளது.

எண்ணெய்க் கப்பலில் திசைதிருப்பும் இயந்திரக் கோளாறு (steering failure) ஏற்பட்டிருக்கலாம் எனத் தோன்றினாலும், விபத்துக்கான காரணம் குறித்துத் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகக் கடலோரக் காவல்படைத் தலைவர் மெலனி பர்ன்ஹாம் (Melanie Burnham) தெரிவித்துள்ளார்.

பயணிகள் மற்றும் பணியாளர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளதாகவும், அதிகாரிகளுடன் இணைந்து செயற்படுவதாகவும் அமெரிக்கன் குரூஸ் லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

காவல் மரணங்கள் குறித்து டி.டி.வி. தினகரன் கண்டனம்!
உலகம்

காவல் மரணங்கள் குறித்து டி.டி.வி. தினகரன் கண்டனம்!

கார்த்திகை 15, 2026
பிரதமரை சந்திக்க டெல்லி செல்கிறார் முதல்வர் விஜய்!
உலகம்

பிரதமரை சந்திக்க டெல்லி செல்கிறார் முதல்வர் விஜய்!

கார்த்திகை 15, 2026
மதுரை நகைக்கடை கொள்ளை: இன்ஸ்டா பிரபலம் கைது!
உலகம்

மதுரை நகைக்கடை கொள்ளை: இன்ஸ்டா பிரபலம் கைது!

கார்த்திகை 15, 2026
அமெரிக்காவில் ஆயிரக்கணக்கான விமானங்கள் இரத்து!
உலகம்

அமெரிக்காவில் ஆயிரக்கணக்கான விமானங்கள் இரத்து!

கார்த்திகை 15, 2026
ஈரானின் ட்ரோன்களை நடுவானில் சுட்டு வீழ்த்திய அமெரிக்கப் படைகள்!
உலகம்

ஈரானின் ட்ரோன்களை நடுவானில் சுட்டு வீழ்த்திய அமெரிக்கப் படைகள்!

கார்த்திகை 14, 2026
அமித் ஷாவுடன் தமிழக ஆளுநர் சந்திப்பு!
உலகம்

அமித் ஷாவுடன் தமிழக ஆளுநர் சந்திப்பு!

கார்த்திகை 14, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

சிறப்புச் செய்திகள்

கொழும்பு வெள்ளம் தொடர்பாக போலி AI காணொளிகள் – மேயர் எச்சரிக்கை

கொழும்பு வெள்ளம் தொடர்பாக போலி AI காணொளிகள் – மேயர் எச்சரிக்கை

1 நாள் முன்னர்
தேசிய போட்டியில் வெற்றியை பதிவு செய்த தெல்லிப்பழை யூனியன் கல்லூரி.

தேசிய போட்டியில் வெற்றியை பதிவு செய்த தெல்லிப்பழை யூனியன் கல்லூரி.

3 நாட்கள் முன்னர்
சாவகச்சேரி விபத்தில் இருவர் உயிரிழப்பு – சாரதி கைது

சாவகச்சேரி விபத்தில் இருவர் உயிரிழப்பு – சாரதி கைது

8 மணத்தியாலங்கள் முன்னர்
யாழில் முன்னெடுக்கப்படவுள்ள கவனயீர்ப்புப் போராட்டம் – அனைவருக்கும் அழைப்பு விடுப்பு

யாழில் முன்னெடுக்கப்படவுள்ள கவனயீர்ப்புப் போராட்டம் – அனைவருக்கும் அழைப்பு விடுப்பு

3 நாட்கள் முன்னர்
அனைத்து பிரஜைகளுக்கும் வளமான வாழ்க்கை: வரவு செலவு திட்ட உரையில் ஜனாதிபதி!

அனைத்து பிரஜைகளுக்கும் வளமான வாழ்க்கை: வரவு செலவு திட்ட உரையில் ஜனாதிபதி!

2 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check